பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1378 கம்பன் கலை நிலை

  • ஆரணம் அறிதல் தேற்றா ஐயனே அணுகி கோக்கிக்

காரணம் இன்றி ஏயும் கண்கள் ர்ே கலுழ கிற்பார் ? . என்பதிலுள்ள ஆன்ம நேயமும் ஆதிமூலத் தொடர்பும் தத் துவ முடிவின் கித்திய கிலேயும் உய்த்துணா வுரியன.

புனிதமான வேதங்களும் அறிந்துகொள்ளமுடியாக ஐயனே மனிதர் அருகு நெருங்கி நோக்கி உள்ளம் களித்து உருகிகின்ற

கிலை இவ்வாறு உணர்த்தப்பட்டுள்ளது. ஆாணம் - வேதம்.

எதாவது காணம் இருந்தால் ஒழிய மனிதன் கண்களி விருந்து ர்ே வெளியே வாாது. கவலை துன்பம் பிரிவு முதலியன பெரும்பாலும் அழுகைக்குக் காரணங்களாம். அது அவலக்கண் ணிர் எனப்படும். அன்பு, இன்பம், ஞானங்களாலும் விழிர்ேபெரு கும். இது ஆனந்தக் கண்ணிாாம். இக்கப் பிந்திய வகையைச் சேர்ந்ததே இங்கு நிகழ்ந்த கண்ணிர். இளவாசைக் கண்டவுடன் தம்மை மறந்து அனைவரும் பாவசமா யுருகி யுள்ளனர்.

‘ அன்புருகு சிங்தையொடும் ஆ உருகுமாபோல்

என்பு உருகி கெஞ்சு உருகி நஞ்சுருகி நிற்பார் :

என்றமையால் மாந்தர் உருகியுள்ள கிலேமைகள் உணாலாகும். நஞ்சு=கைத்து. மனம் காைங்து என்றபடி.

கினைந்து உருகும் அடியாாை கையவைத்தார் ; கில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்.” காைந்துள்ளதுபோல் இங்கே பாவசமான அன்புப் பெருக்கில்

எனஅப்பாடிகள் கடவுளைகோக்கிக்

சனங்கள் இன்பக் கண்ணிர் வடிக்கிருக்கின்றனர்.

இராமன்பால் மக்கள் கொண்டிருக்கின்ற அன்பும் ஆர்வ மும் அவர்தம் கண்கள் சிேனுல் கண்டு நாம் கருதி உருகுகின் ருேம் அவருடைய மனநிலையும் மதிப்பும் விநயமும் ஆர்த்தி மீதுணர்ந்து வார்த்தைகளில் மிளிர்கின்றன.

அவனி ஆள்வார், புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது ; என்றது உலகத்தை ஆளும் அரசர் இனிமேல் பிள்ளைகளைப் பெறுவது பேதைமையாம் என்றவாறு. கண்டவர்களுடைய உள்ளத்தையும் உயிரையும் கொள்ளைகொண்டுள்ள இந்தப் பிள்ளை எதியே வேறு பிள்ளைகள் சூரியன் முன்னிலையில் மின்மினிப்

பூச்சிகள்போல் மாருய்ச் சீரழிந்து கிற்கும் என்பதாம்.