பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1514 கம்பன் கலை நிலை

வருகின்ற அழகனுக்கு உவமை கூறுவது? ‘ என உளம் மறுகி நாணினர். ட்இங்கனம் எல்லா வகையிலும் எ க்தகைய நல்ல பொருள்களும் யாதும் ஒவ்வாத திவ்விய வடிவனை இச் சுகுண சுங்தான் வெவ்விய காட்டுக்குப் போக நேர்ந்தானே ! என்று சோகம் மீதார்ந்தமையால் ஐயோ! என இரங்கி அயர்ந்து ஏங்கினர்.

அல்லல் அடைந்த அடவிக்குச் செல்ல நேர்ந்தும் யாதொரு கவலையும் இல்லாமல் அரியாசனத்தில் அமர்ந்துள்ளது போலவே பெருமிதமும் பொலிவும் திரு முகத்தில் பெருகி இருக்கமையால் அழியா அழகு உடையான் என விழி யிமையாமல் விழைந்து நோக்கி வழி முழுதும் கண்ணுய் வியந்து கின்றார்,

வேற்றுமை

மனிதன் எவ்வளவு அழகுடையயிைனும் கால யால் கோலம் திரிவன் ; இளமையில் விளங்கி கின்ற அழகு முதுமையில் அழியும் அங்கனம் யாதும் கிரியாமல் யாண்டும் குறையாமல் என்றும் ஒருபடியாகவே கின்று நிலவிய திவ்விய சவுக் கரியம் ஆதலால் அழியா அழகு ‘ என அது வழிபாடு செய்ய வந்தது.

அழகன் கானகம் போனன் என்பதை இவ்வளவு அழகாகக் காட்டி யிருக்கிறார். அஞ்சனம் முதலிய நான்கும் உருவ இயல், ஒளி நயன், அரிய வியன், பெரிய பயன்களை முறையே விளக்கின.

‘ கார் மலர்ப்பூவை கடலே இருள் மணி அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை.

(பரிபாடல் , 13)

திருமால் மேனிக்கு ஐந்து உவமைகள் இதில் வந்துள்ளமை அறிக. அக் கரியவன் பசிய கோலத் திருமேனியனுப்ப் புதிய ஒரு அதிசய அழகுடன் அவதரித்து உலகம்உய்ய வெளிஎறினன்.

பொய்யோ எனும் இடையாள் எனச் சீதையைக் குறித்தது * இல்லை உண்டு என்ன கின்ற இடை ‘ என முன்னம் சொன்ன அடையாளத்தை அடையாக்கி எழுந்தது. பெண்மைக்குரிய உண்மையான நல்லியல்புகள் யாவும் ஒருங்கே வாய்ந்த இனிய அம் மெல்லியல் வலிய கல்லியல் கானில் காதலன் பின் செல்லும்

ஆகாத்தின் அருமைப்பாடும் உரிமையும் அறிய வந்தது.