பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையிலேயே துறவறமும் அருளாசிரியர் தலைமை யும் ஏற்ற ஐந்தாம் முறை அடிகளார், மடத்துச் சோற்றை வளமாக உண்டுகொண்டு வறிதே தசை மூட்டையை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை; அ டி க ள ார் தக்க ஆசிரியர்களே அமர்த்திக்கொண்டு தமிழ் மொழியையும் வட மொழியையும் பரந்த அளவில் ப யி ன் று பெரும் புலமை பெற்ருர், தமது நேரம் முழுவதையும் நூல் ஆராய்ச்சியிலேயே ஈடுபடுத்தினர். அடிகளாரின் அருட் பணிகள் கடல் நீரை முகந்து கறுத்துத் திரண்ட மு கி ல் க ள் பெருமழை பொழிவது போன்று, சிறக்கக் கற்றுத் தெளிந்த அடிகளார் கருத்துச் செறிந்த சொல்மழை .ெ ப ா ழி ய த் தொடங்கினர். ஒரு மணி நேரம் பேசினலே பெ ரு மூ ச் செறிந்து மின் விசிறியை விட்டகலாதிருக்கும் பெருமக்கள் நிறைந்த இவ்வுலகில், அடிகளார் ஒரே நாளில் ஒரே மூச்சாக ஐந்து மணிநேரம் தொடர்ந்து சொற்பொழிவாற்று வது வழக்கம். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து சொற் பொழிவாற்றுவார். யார் வேண்டுமானலும் எ வ் வ ள வு நேரம் வேண்டுமானலும் தொடர்ந்து சொற்பொழிவாற்ற லாம் - ஆனல், கேட்பதற்கு ஆட்கள் வேண்டுமே! மக்கள் ஐந்து மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்பதென் ருல், மிகவும் கவர்ச்சியான சுவையான பயன் மிக்க கருத்துக்களை வரை யாது வாரி வழங்க வேண்டு மல்லவா? அதைத் தான் அடிகளார் செய்து வந்தார். ஒரு நாளில் மாலே ஐந்து மணி தொடங்கி இரவு பத்து மணி வரையும் சொற்பொழிவாற்றுவதோடு அடிகளாரின் பணி அமைந்து விட்டதா? இல்லேயில்லை. நாடோறும் முற் பகலிலும் பிற்பகலிலும் இடையருது மாறி மாறி வரும்