பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை புலிசை என மரூஉப் பெயராக வழங்கப்பெறும் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தில், திருக்கோவ லூர் ஆதீனத்தின் ஐந்தாம் பட்டத்து அருளாசாகை வீற்றிருந்து அரும் பெ ரு ஞ் .ெ ச ய ல் க ள் ஆற்றிய 'சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகர்’ என வழங்கப் பெற்ற ஞானியார் அடிகளார் அவர்களின் நூற்ருண்டு நிறைவு விழா, பிரமாதீச ஆண்டு வைகாசித் திங்கள் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மூலநாளில் (20-5-1978) நடைபெற விருக்கிறது. அடிகளாரின் வியத்தகு மாண்புகளுடன் கூடிய வரலாற்றினே இச் சிறு நூல் சுருக்கமாகத் தருகின்றது. நூற்ருண்டு விழா நடைமுறைக்காகவும், விழா மலருக்காகவும், நூற்ருண்டு விழாத் தொடர்பாக அடிக ளாரின் பெயரில் அமைக்கப்பெற விருக்கும் த மி ழ் க் கல்லூரிக்காகவும் பெருநிதி தேவைப்படுகிறது. அந்தப் பெருநிதி திரட்டும் முயற்சியின் ஒரு சிறு கூருக இந்நூல் வெளியிடப் பெறுகிறது. அதே நேரத்தில், அடிகளாரைப் பற்றி அறியாத இந்தக் காலத்து இளந் தலே முறையின ருக்கு அடிகளாரை அறிமுகப்படுத்தும் பணியையும் இவ் வெளியீடு நிறைவேற்றுகிறது. அன்பர்களின் பேராதரவு வேண்டப்பெறுகிறது. புதுவை - சுந்தர சண்முகன் 9-4-1978