பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு சிஷ்யைகள் 129*

கிறாப்போல் உட்கார்ந்து கொண்டேயிருந்தால் என்ன அர்த்தம்? பைரவி ஆரம்பிக்கட்டுமா?’’

‘ஹரி, ஒரு சின்னச் சந்தேகம். கேட்கலாமா?’’

  • * στGύτσδΤ?” “

போட்டோ என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நாம் இருவரும் இப்படியே பாட்டுச் சொல்லிக் கொள் வதுபோல் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டால்....’

உருப்பட்டாற்போலத்தான்! அடதாள வர்ணம் ஆரம்பிப்பதற்குள்ளேயே கச்சேரிக்கு உட்கார்ந்திருக்கிற நினைப்பு வந்துவிட்டாற் போலிருக்கிறது. இந்த வெட்டிப் பேச்செல்லாம் வேண்டாம்; எங்கே பாடு.”

“ஸ்ா, ரி நீ தா நீ ஸ்ாரீ, கலாரீ’

சுசீலா கணிரென்று பாடினாள். ஹரி இரண்டு மூன்று முறை அவளைத் திருத்தினான்.

- பாடம் முடிகிற வரை நீ எப்படி வேண்டுமானாலும் என்னை ஆட்டி வைத்துக் கொள்; தம்பூராவைக் கீழே வைத்து விட்டால் பிறகு நான்தான் உனக்கு வாத்தியார். ஞாபகம் இருக்கட்டும். இன்று நீ திருவிடைமருதூர் போவதைப் பார்க்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அன்று எப்படியோ சுசீலாவின் என்ணப் படியே ஹரிக்கு திருவிடைமருதுார் போக முடியாமற் போய் விட்டது.

பாகவதர் பம்பாய் போயிருந்தார். அங்கே இன் னொரு கச்சேரிக்கு அவரைக் கேட்டதனால், டிசம்பர் முப்பத்தோராம் தேதிக் கச்சேரியை ஒத்திப் போட முடியுமா?, என்று திருநெல்வேலி சபா காரியதரிசியைக் கேட்டு ஹரி தந்தியடித்திருந்தான். பாகவதருக்கு எப்படிச் செளகரியமோ அப்படிப் போடுகிறோம். அக்தனை தூரம் பம்பாயில் இருக்கிறவர்கள் பாகவதரின் பாட்டைக் கேட்க