பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு சிஷ்யைகள் 131

அவளை ஆட்கொண்டு விட்டன. அவனால்தான் தன் உள்ளத்து எண்ணம் ஈடேற வகை ஏற்பட்டது என்ற வகையில் அவனிடம் அவளுக்கு அளவு கடந்த பக்தியும் பாசமும் பெருக்கெடுத் தோடின.

ஹரி இடுகிற கட்டளையினின்றும் அவள் சிபிறழுவ தில்லை. தன் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுப்ப தில்லை. அவன் விருப்பத்துக்கெல்லாம் அவள் குரலைத் திருப்பினாள். அவனாகப் பார்த்துக் கற்றுக் கொடுப்பதை

தவிர எதிர் வார்த்தை பேச மாட்டாள்.

இப்படி இரண்டு வித குண விசித்திரமுள்ள சிஷ்யை களுக்கு ஹரி குருவாக விளங்கினான். அங்கே சுசீலா அவனுக்குக் கட்டளையிடுகிறாள். இங்கே வசந்தி அவன் நாவசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இருவருமே புத்திசாலிகள். குணத்தைத் தவிர அறிவில் அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இைைல. ஒரே மரத்துக் கனிகள் அல்லவா?

இன்று என்ன புதுப் பாடம் எடுக்கலாம்?’ என்று ஹரி கேட்டான்.

வசந்தி பதிலே பேசவில்லை.

நான் கேட்டது காதில் விழவில்லையா? உன்னைத் தான் கேட்கிறேன்’ என்றான் ஹரி மீண்டும்.

  • எனக்கு என்ன சொல் லிக் கொடுக்கவேண்டும் என்பது உங்களுக்குத்தானே புரியும்; என்னைக் கேட்

டால்?’ என்றாள் வசந்தி.

ஹரி மனத்துக்குள் சிரித்துக் கொண்டான். அப்போது சுந்தரி உரத்தக் குரலில், “ஹரி ஹரி’ என்று திண்ணைப் பக்கத்திலிருந்து கூப்பிடுகிற குரலைக் கேட்டு இருவருமே எழுந்து வாசலைப் பார்க்க விரைந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் சுந்தரியின் கண்களில் நீர் வந்து விட்டது; ஹரி இந்த ஆள் சுவாமி மலையிலிருந்து