பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புல்லின் இதழ்கள்

பாகவதருடைய இந்த வார்த்தையைக் கேட்டதும் வந்திருந்த அத்தனை பேருடைய முகங்களும் மலர்ந்தன.

காரியதரிசி பாபு சட்டென்று எழுந்து நின்று, நாங்கள் இனி என்ன அண்ணா சொல்லப்போகிறோம்? சற்று முன்பு நீங்கள் உடம்புக்கு முடியாதென்று கூறியதும் நாங்கள் உங்களிடம் என்ன கேட்க வேண்டுமென்று எண்ணினோமோ அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். கமிட்டியில் பாஸ் செய்து பத்திரிகை அச்சடித்து விடுகிறோம் அண்ணா’ என்றார்.

அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரி, சட்டென்று பாகவதரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவன் இமைகள் நீர் கோத்து ஈரமாக இருந்தன.

“ஐயா, இவர்கள் எல்லாம். ஏதோ உற்சாகத்தில் என்னைக் குஷிபடுத்திப் பேசிவிட்டார்கள். குருவி தலையில் பனங்காயைச் சுமத்துவது போல, அரங்கேற்றங் கூட ஆகாத என்னைக் கொண்டுபோய் அத்தனை பெரிய சதவில் உட்கார வைத்தால் என்னால் சாமளிக்க முடியுமா?’ என்றான் பணிவாக,

  • எல்லாம் சமாளிப்பாய். உன் யோக்கியதையையும் திறமையையும் இவர்கள் சொல்லியா நான் தெரிந்து கொள்ளப் போகிறேன்? பனங்காய் அல்ல, பர்வதத் தையே தாங்குகிற சக்தி உனக்கு இருக்கிறது. ராமர் சந்நிதியில் வெள்ளிக்கிழமை உனக்கு நடக்கப் போகிறது. பார்; அதுதான் உன் அரங்கேற்றக் கச்சேரி. ஒன்றுக்கும் கவலைப்படாதே. எல்லாம் ஜமாய்த்துவிடுவாய்’ என்றார் பாகவதர்.

சிறிது நேரம் எல்லாரும் கச்சேரியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஹரிக்கு யாரைப் பக்கவாத்தியமாகப் போடுவது என்பதைப்பற்றிச் சர்ச்சையைக் கிளம்பினார் பாபு. பிடிலைப் பொறுத்தவரை கைராசிக்காரரான பஞ்க