பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 145

‘உங்களையெல்லாம் எண்ணித்தான் அம்மா கவலைப் படுகிறேன்’ என்று பொதுவாகத்தான் அவரால் கூற முடிந்தது. ஆனால், அப்படிக் கூறியதே எத்தனை தவறாகிவிட்டது!

எங்களைப்பற்றி என்னப்பா கவலை? அம்மாவும் நானும் இருப்பது உங்களுக்குப் பாரமாகத் தோன்றுகிறதா

அப்பா? “’ so

வசந்தியின் வார்த்தைகள் சுரீர்” என்று பாகவதரின் உச்சி நரம்பைச் சென்று தாக்கின.

“வசந்தி, நான் என்ன சொன்னேன்; நீ என்ன பதில் சொல்லுகிறாய்? உங்களைப் பற்றி என்றால், நீயும் அம்மாவுந்தானா? இங்கே உள்ளவர்களை ஏன் தள்ளி வைத்துவிட்டாய்? உன்னை நான் மிகவும் புத்திசாலி என்று எண்ணியிருந்தேனே, வசந்தி! இந்த வார்த்தைகள் உன் பெரியம்மா காதில் விழுந்தால் அவள் மனம் என்ன பாடு படும்? உங்களைப் பற்றி என்றால் காயத்திரி, நீ, சுசீலா ஆகியவர்களையும் பற்றித் தான் கூறினோன். மனிதன் எழுந்து நடமாடும்போது மனமும் கூத்தாடுகிறது. அவன் விழுந்து விட்டால் அதுவும் படுத்துவிடுகிறது. இனிமேல் முன்போல் எழுந்து நடமாடுவேன் என்ற நம்பிக்கை

எனக்கே இல்லை. பாகவதர் மளமளவென்று பேசித்

தீர்த்தார்.

“நான் தவறாகப் பேசிவிட்டதற்கு என்னை மன்னித்து

விடுங்கள் அப்பா. நீங்கள் இவ்வளவு கவலைப்பட்டு

அதைரியமடைவதற்கு அர்த்தமே இல்லை. இப்போது எங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் விரைவிலேயே குணமடைந்து கச்சேரி பண்ணத்தான் போகிறீர்கள். வீணாக நீங்களே இப்படிக் கவலைப்பட்டால், எங்களுக்கு. ஆறுதல் கூற யார் இருக்கிறார்கள்? நீங்கள் கீழே விழுந்த செய்தியைக் கேட்டதிலிருந்து, அம்மா அரை வயிற்றுக்குக் கூடச் சாப்பிடுவதில்லை. எல்லாரையும் போல் கூடவே