பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பால் கறக்கவா?

பாகவதரைப் போன்ற மனோதைரியமும், நெஞ்சுறு தியும் உள்ளவர்களைப் பார்ப்பது அரிது. எந்த நிலைமை யையும் எதிர்த்து நின்று உறுதியோடு சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர். எதற்கும் கலங்காதவர். அப்படிப்பட்டவரே அன்று கண்கலங்கி விட்டார்.

கச்சேரி ஒன்றுக்காகக் காலண்டரைப் புரட்டிப் பார்ப் பதைத் தவிர, எதிர் காலத்தைப் பற்றி அவர் கனவுகூடக் காண்பவரல்ல. அதற்காக எந்தத் திட்டமும் அவர் வகுக்க வில்லை. ஆனால் இப்போது அதையெல்லாம் தாம் கவனிக்கத் தவறியது பெரும் தவறு என்று அடிக்கடித் தோன்ற ஆரம்பித்தது. குடும்ப பாரத்தைப் பற்றி சிந்திக்க லானார். காயத்திரியைப் பற்றி நினைத்த போதெல்லாம் கண் கலங்கியது. அவளுடைய எதிர்காலத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று எண்ணினார்.

சுசீலா, வசந்தி திருமணததைப் பற்றி எண்ணினார். இத்தனைக்கும் மேலாக ஹரியைப் பற்றி எண்ணிக் கவலைப் பட்டார். இப்படி கவலைப்படுவதே வழக்கமாகி விட்ட பின் இனித் தாம் எழுந்து சச்சேரி செய்ய முடியும் என்ற தைரியத்தையும் அவர் அறவே இழந்து விட்டார். திடீரென்று ஒரேயடியாக முதுமையை அடைந்து; உடல் தளர்ச்சியடைந்து விட்டாற்போல் தோன்றியது அவருக்கு, கண் கலங்கியது.

அருகில் இருந்த வசந்தி, ஏன் அப்பா அழுகிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டபோது, அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே அவருக்குத் தெரியவில்லை.