பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*194 புல்லின் இதழ்கள்

இரண்டும் என்னுடையவை. நீ மேடையிலே உட்கார்ந்து பாடி எங்களையெல்லாம் கண்ணிரால் கரைய வைத்தாயே, அதற்காக உனக்குத் தங்கத்தினால் அபிஷேகம் பண்ணி னாலும் தகும். ஆனால் இப்போது கையில் இருப்பவை இவைதாம்’ என்று கூறித் தோடாவை ஹரியின் சையில் போட்டு, செயினையும் கழுத்தில் போட்டாள்.

  • அது என்ன, பவித்திர விரலில் வைரம் டால் அடிக் கிறது? சுந்தரி கொடுத்ததா? எடுங்கள் இப்படி என்று கணவரிடமிருந்து அதையும் வாங்கி, ‘சுந்தரி, உன் ராசிக் கையாலே இந்த மோதிரத்தையும் ஹரியின் விரலில் போட்டு விடேன்’ என்றாள் லட்சுமியம்மாள் மிகவும் பரிவோடு.

எல்லாரும் லட்சுமியின் கம்பீரமான சொல்லுக்கு, மந்திர சக்தியால் கட்டுப் பட்டவர்கள் போல் செயல் புரிந்தனர்.

கையில் தோடாவும், கழுத்தில் சங்கிலியும், விரலில் மோதிரமும் அணிந்து கொண்டு நின்ற ஹரியைப் பார்த்து, * இடையில் ஒரு பீதாம்பரமும், தலையிலே மயிற்பீலி கிரீடமும் இருந்தால் ஹரி, சாட்சாத் கிருஷ்ணன்தான்’ என்றார் பாகவதர்.

ஹரி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கழற்றி லட்சுமியம்மாளிடம் கொடுத்தபடி, செட்டி மண்ட பத்துக்குப் பக்கத்தில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். கச்சேரி முடிந்ததும் நேராக அங்கே ஒடி வந்தேன்.

உங்களைக் காணோம்’ என்றான்.

“ஆமாம், நீங்கள் எல்லாரும் என்னைச் சீக்காளி ஆக்கி வீட்டில் விட்டுப் போய் விட்டீர்கள். எனக்கு இங்கே இருப்புக் கொண்டால்தானே? ஆனால் வீட்டுச் சாவி என்னிடம் இருந்ததனால், கச்சேரி முடிந்து இங்கே வந்து காத்துக் கொண்டிருக்கப் போகிறிர்களே என்று: கலெக்டர்