பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 193.

பழங்களின்மேல் வைத்துக் குருவின் கையில் கொடுத்து வணங்கினான்.

மனநிறைவோடு பெற்றுக்கொண்ட பாகவதர், ‘இப் போது உன் மனக்குறை நீங்கி விட்டதல்லவா?’ என்று அப்படியே ஹரியை மார்போடு அனைத்துக்கொண்ட வண்ணம் உள்ளே இருந்த லட்சுமியை அழைத்தார்.

மனைவியைப் பார்த்ததும், “இதோ பார்த்தாயா? ஹரி பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். குருதட்சனை கொடுக்காமல் இருக்கக் கூடாதாம். இவற்றை எனக்குத் தன் ஆசாரிய தட்சணையாகக் கொடுத்திருக்கிறான். உள்ளே கொண்டு வை’ என்று நீட்டினார் மனைவியிடம்”

லட்சுமி கணவரை விழித்துப் பார்த்துவிட்டு, ‘என்ன? விளையாடுகிறீர்களா? பெண் நெக்லெஸைத் தொலைத்து விட்டாள் என்று தவிக்கிறேனே ஏற்றுக் கொள்கிறாளா பார்க்கலாம் என்று என்னை ஆழம் பார்க்கிறீர்களா?” என்று இரைந்து கேட்டாள்.

பிறகு லக்ஷ்மியம்மாள் ஹரியின் பக்கம் திரும்பி. ஏண்டாப்பா ஹரி, நீ என்ன கொடுப்பாய் என்று. எதிர்பார்த்தா உனக்கு இவர் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார்? உன் மனசு இருக்கிறதே; அதைவிட இந்தத் தோடாவும் சங்கிலியுமா உயர்ந்து விட்டன. இனி மேல் இந்த மாதிரியெல்லாம் பிரித்து வைத்து நடந்து கொள்ளாதே; எனக்குத் தாளாது. நானும் கலெக்டர் பெண்டாட்டி மாதிரி இருத்தால், கூட்டத்தில் அப்போதே நாலு வடம் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்து அனுப்பி யிருப்பேன். இங்கே கிட்டே வா. கச்சேரி கேட்ட போது எனக்கு ஏற்பட்ட குறையை இப்பேதுே தீர்த்துக் கொள் கிறேன். உன் சந்தோஷத்துக்காக நீ கொடுத்த இந்த இரண்டையும் உங்கள் குரு ஏற்றுக் கொண்டு என்னிடம் கொடுத்துவிட்டார். இப்போது இவை