பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 1994

விமரிசனம் வந்தாலும் வரலாம். அந்தப் பத்திரிகையில் நம்ப சஞ்சீவிதான் சங்கீத விமரிசனம் எல்லாம் எழுதுகிறவர்.

அவரும் கச்சேரியைக் கேட்டு அசந்து போனார். என்னைக் கண்டதும், பயல் வெளுத்து வாங்கி விட்டான். என் பெண் அம்புலு கல்யாணம் நிச்சயமானால் இந்தப் பையன் கச்சேரிதான். பெயரில் இளம் வித்துவானே தவிர, பாட்டு நன்றாக முற்றித் தெறித்தது’ என்றார். “இப்படியெல்லாம் சொன்னால் போதாது. அது உங் களுக்கும் எனக்குந்தான் தெரியும். ஊருக்குப் போனதும் மனத்தில் பட்டதை ஆணித் தரமாக அடித்து எழுதுங்கள்’ என்று சொன்னேன். இன்று காலை வண்டிக்குத்தான் புறப்பட்டுப் போனார். என்ன எழுதியிருக்கிறார் என்று அடுத்த வாரம் பத்திரிகை வாங்கிப் பார்த்தால்தான் நெரியும்’ என்றார் காரியதரிசி,

அது சரி, விஷயம் நம்மிடம் பிரமாதமாக இருக்க லாம்; ஆனால், உலகத்துக்குத் தெரிய, அச்சும் பேப் பரும் அவர்களிடம் அல்லவா இருக்கின்றன? எப்படியோ ஹரியின் விஷயமாக நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத் துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது, இப்போது நீங்கள் சொல்லித்தானே தெரிகிறது?’ என்றார் பாகவதர்.

அதற்குள் அருகில் இருந்த கரூர்க்காரர், ‘நானே சொல்லி விடுகிறேன். எங்கள் சபா ஆரம்பித்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. வெளியில் பிரபலமாகவில்லையே தவிர, உள்ளுரில் நிறைய ஆதரவும்; ஏர்ாளமான உறுப் பினர்களும் இருக்கிறார்கள். நாங்கள் பெரிய வித்துவான் களுக்குக் கொடுக்கிற ரேட்"டையே, ஹரிக்குக் கொடுக் கிறோம். சரிதானே? நான் அங்கே போய்த் தேதி குறிப் பிட்டு எழுதலாமா?’ என்று கேட்டார் அதைப் போலவே வேலூர்க்காரரும்; முன்பு பாகவதருக்கு எப்படி நடந்து