பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் ஆசை 209,

போடாமெத் தூக்கிக்கிட்டுத்தான் அலையனும், ஏதோ தெய்வம் உனக்கு இம்மானாச்சும் கருணை காட்டிச்சே. அதுதான் எனக்கு வேணும்’ என்று கொட்டித் தீர்த்தாள்.

பெரியசாமி திரும்பவும் மனைவியருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, இப்போ இங்கே எதுக்கு அவன் வந்திருக்கான்னு கேளு. ஒன் ராமாயணத்தை எல்லாம் கேட்டுக்க அவன் வரல்லே’ ‘ என்று அலுப்போடு கூறினான்.

“ உனக்கு இப்போ என்ன வந்துட்டுது? ஒரே முட்டாக் காயறே. வீட்டுக்கு வந்து நிக்கிற பிள்ளே கூப்பிட்டாக் கூடப் பேசமாட்டேங்கறியே? அவன்கூடப் பேசினா என்ன, உன் வாய் முத்து உதிர்ந்தா போகும்? இல்லே, போறப்பே உன் தலையிலே அவன் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போனானா?’ என்று கணவனைக் கடிந்து கொண்டாள் முனியம்மா.

ஹரி யோசித்தான்; அடிக்கவோ கோபிக்கவோ பெற்றவர்கள் உரிமையுள்ளவர்கள்; ஆனால் அவர்களிடம் அன்பும் பணிவும் கொண்டிருக்க வேண்டியதுதானே பிள்ளைகளின் கடமை? வெறுப்பை வெறுப்பால் வெட்டி வீழ்த்திவிட முடியுமா? அதைத் தடுக்க அன்பென்னும் கேடயம் அல்லவா வேண்டும்?’ தந்தையின் சீற்றம் அவன் மனத்தை வருத்தவில்லை.

ஹறி சி நெடுஞ்சாண்கிடையாகத் தந்தையின் பாதங் களில் விழுந்து வணங்கினான். பதறிப்போன பெரியசாமி, டேய் டேய், எழுந்திருடா! என்னை ஒன்னும் நீ கும்பிட வேண்டாம். நான் ஆசீர்வாதம் பண்ணினவுடனே நீ பெரிய சங்கீத வித்வானாயிடப் போறியா? இல்லே ஊர் உலத்திலே பெரிய பெரிய ஜரிகை வேஷ்டி போட்டுக் கிட்டு மகா வித்வானுங்க இருக்கச்சே, நீதான் பாடிக் கிழிக்கப் போறியா? உனக்கும் சங்கீதத்துக்கும் என்ன,