பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:210 புல்லின் இதழ்கள்

சம்பந்தம்? உன் அப்பன் வித்துவானா? இல்லே, உங்க ஆயி வித்துவானா? உனக்குத்தான் புத்தி கெட்டுப் போச்சுன்னா அவங்களுக்குமா புத்தி கெட்டுப் போகணும்? என் தொழிலை ஆசையாக் கத்துக் கொடுத்தேன். பெரிய கெட்டிக்காரனாகிச் சுயமாச் சம்பாதிச்சு மாயண்டியைப் போலே பெரிய கடையெல்லாம் வச்சு முன்னுக்கு வருவேன்னு நினைச்சேன். இந்தக் குடும்பத்திலே அக்கறை இருந்தா நீ இப்படி எங்களை விட்டுட்டு ஒடிப்போவியா? இங்கே குழந்தைகளை வெச்சுகிட்டு நான் என்ன கஷ்டப் படறேன்னு உனக்குத் தெரியுமா? இப்பவும் கண்ணப்பா, ஒன்னும் கெட்டுப் போகல்லே. நீ சரின்னு என் தொழிலைச் செய்யறதாச் சொல்லு. நாளைக்கே நல்ல கம்பெனியிலே வேலை வாங்கித் தறேன். ரெண்டு வருஷம் கஷ்டப் பட்டாலும் சொந்தக் கம்பெனி சின்னதா ஆரம்பிச்சுடலாம். குடும்பத்தை உன் கையிலே ஒப்படைச்சுட்டு நான் நிம்மதியா இருப்பேன். இல்லேன்னா நீ உருப்பட மாட்டே’ என்று கூறியபோதே முனியம்மாள் சீறி விழுந்தாள்.

‘உனக்குப் பைத்தியந்தான் பிடிச்சிருக்கு. வீடு தேடி வந்த பிள்ளையை இம்மாந்தான் பேசுவியா; இன்னமும் பேசுவியா? ஏதோ கும்பிட்டா, கடவுளை நெனச்சுக் கையைக் காட்டுவியா: ஒன் மனசிலே பெரிய விசுவாமித்திர மவரிசின்னு நெனப்போ? பெரிய சாபம் கொடுக்கறியே! நீ பொழுதுக்கும் லைட்டைத் தூக்கிச் சம்பாரிச்சு எம்மாங் காசு வச்சிருக்கே, அவனையும் அந்தத் தொழில் பண்ண லேன்னு திட்டறே. ஏதோ அதினாச்சியும் நல்லாப் பாட்டுப் பாடி நாலு எடத்துக்குப் போய்க் கைநிறையச் சம்பாரிச்சா...... அது ஒனக்கும் எனக்கும் இல்லாமே வேறே யாருக்கு?’ என்று முனியம்மாள் பேசிக்கொண்டிருந்த போதே ‘நான் இங்கே ஒரு முக்கியமான விஷயமாக வந்தேன்’ என்று கூறிய ஹரி, ஆமாம், சிங்கப்பூர் மாமா எங்கே?’ என்று குறுக்கே ஒரு கேள்வியைக் கேட்டான்.