பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கிடைத்தது 243

போய்விட்டது. அது இப்போது கிடைத்து விட்டது. வெற்றி முரசு கொட்டுங்கள். இரண்டும் இமிட்டேஷன் கள்’ என்று தோளில் இடித்துக்கொண்டு பாட ஆரம் பித்தாள்.

உடனே ஹரி, ஆமாம், நீ பணக்காரி. எல்லாரும் உன்னைப்போல் அசல் வைரத்திலேயே ஜொலிக்க முடி யுமா?’ என்று கூறி முடிக்கு முன்னர், வசந்தி சட் டென்று பாடுவதை நிறுத்தி விட்டு ஹரியினுடைய முகத்தை உற்று நோக்கினாள்.

‘அவளைச் சொன்னால் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் பொத்துக்கொண்டு வருகிறது? அவள் இமிடே ஷன் இல்லை, நான் தான் இமிடேஷன்’ என்று தானே குத்தலாகப் பேசுகிறீர்கள்?’ அவள் கண்களில் கண்ணிர் பொல பொலவென்று வந்துவிட்டது.

ஹரி பதறிப் போனான். அவனுக்கு என்ன செய்வ தென்று புரியவில்லை. உள்ளே திரும்பிப் பார்த்தான். சுந்தரி அடுக்களையில்தான் இருந்தாள். வசந்தியைப்பற்றி அவதூறாகப் பேச வேண்டுமென்றோ, சுசீலாவைப் புகழ வேண்டுமென்றோ அவன் மனத்தாலும் கருதியவனல்ல. ஆனால் இதை அவனால் வசந்தியிடம் விளக்க முடியவில்லை. விளக்கினாலும் அவள் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. சொன்னதையே சொல்லிக் கொண் டிருந்தாள்.

ஹரி எழுந்து, சரி, இன்று இத்துடன் பாடம் போதும். நான் வந்த நேரம் சரியில்லை. நாளை வருகிறேன்’ என்று கூறுமுன் வழியை மறித்துக்கொண்டு நின்ற வசந்தி, அம்மா, சீக்கிரம் இங்கே வந்து பாரேன்’ என்று கத்தினாள்.

கையில் உப்புமாவையும் காபியையும் எடுத்து வந்த சுந்தரி, எதற்கடி, இப்படிப் பெரிதாகக் கத்தி அமர்க்களப்