பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புல்லின் இதழ்கள்

படுத்துகிறாய்?’ என்று பெண்ணை அதட்டிய வண்ணம் அங்கு வந்தாள்.

பாரம்மா, இப்பவே புறப்பட்டுப் போகிறேன் என்று கிளம்பி நிற்பதை?’ என்று வசந்தி தாயாரிடம் ஹரியைப் பார்த்துக் குற்றம் சாட்டும்போதே அவளுடைய குரல் கரகரத்துக் கண்களில் நீர் தளும்பியது.

உடனே சுந்தரி, சரி, சரி, இரண்டு பேரும் டிபனைச் சாப்பிடுங்கள். ஹரி ஒன்றும் போகமாட்டான்; நான் பார்த்துக்கொள்கிறேன். என்னடா பாட்டுச் சப்தம் காணோமே என்று பார்த்தால் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். வசந்தி, இதற்கெல்லாம் கொஞ்ச நாள் போகட்டும். உன் முரட்டுச் சுபாவத்தை இப்பவே காட்டாதே; ஹரி பயந்து போய், பிறகு கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடப் போகிறான்’ என்று சுந்தரி கேலியாக பேசியபோது

போ அம்மா’ என்று வசந்தி சிணுங்கினாள்.

ஹரி கையில் எடுத்த உப்புமாத் தட்டு நழுவித் “தடா லென்று தரையில் விழுந்தது.