பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 புல்லின் இதழ்கள்

‘கிண்டல் வேறு பண்ணுகிறீர்களா?'’

ஏன், பண்ணக்கூடாதா?’’

நான் அப்படிச் சொல்லி எத்தனை நாளாயிற்று? இல்லை, அப்படியே நீங்கள் இன்று பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் வா!’ என்றால் நான் மாட்டேன் என்று சொல்லிவிடப்போகிறேனா. உங்களுக்கு உண்மை யில் எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதில் அக் கறையோ, ஆர்வமோ இருந்தால் தானே அப்படியெல்லாம் கேட்பதற்கு!'”

இல்லை சுசீலா! இதெல்லாம் நீயாக கற்பனை பண்ணிக் கொள்வது. எனக்கு இரண்டு பேருமே ஒன்று தான்.'”

“இதை நான் நம்பத் தயாராயில்லை. உங்களுடைய குறியெல்லாம் வசந்தி நன்றாக பாடவேண்டும். சிக்கிரம் அவளை மேடையில் உட்கார வைத்துப் பெயர் சம்பாதிக்க வேண்டும்’ என்பதுதானே. உங்களுடைய கெட்ட எண்ணம் எனக்கா தெரியாது?”

“அப்படியே இருந்தாலும், அது எப்படிக் கெட்ட எண்ணம் ஆகும் சுசீலா? உன்னைத் தவிர இதை யாரும் இப்படிப் பேச மாட்டார்கள்?’

“ஆமாம், இந்த வீட்டில் எல்லாருக்கும் நான்தான் பொல்லாதவள், கெட்ட எண்ணக்காரி திருப்திதானே?” பதிலுக்குக்கூடக் காத்திராத சுசீலா தாங்கமுடியாத கோபத்தோடு மாடியை நோக்கிப் போனாள்.

காயத்திரி நீண்ட பெருமூச்சு விட்டாள். ஹரி வீட் டுக்குள் நுழைந்ததிலிருந்து, அதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் அவள் உள்ளேயிருந்தபடியே கேட்டாள்.

‘ஹரியைப் பற்றி இவளுக்கு ஏன் இத்தனை அக்கறை? அவனிடம் யார், எப்படி நடந்து கொண்டால் இவளுக்கு