பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு ஆராய்ச்கி 255

இதைக் கேட்டதும் காந்தாமணியின் தாயார் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்படியானால் ரொம்ப சந்தோஷம். காலையில்

கார் அனுப்புகிறேன். தயவு செய்து அவசியம் வர வேண்டும்’ என்று கூறி விடை பெற்றாள்.

அன்றிரவு கச்சேரியின்போது கபிருதீசுவரர் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கச்சேரி மேடையின் முன் வரிசையில், தன்னுடைய ஒவ்வொரு கச்சேரிக்கும் தவறாமல் விஜயம் செய்யும் ரசிகர்களை ஹரி கண்டான். மேடை மீது ஹரி, ஏறி அமர்ந்ததுமே அவர்கள் ஹரிக்கு வணக்கம் தெரிவித்தனர். அனைவருக்கும் ஹரியும் பதில் வணக்கம் தெரிவித்தான். அந்தக் கச்சேரிக்குகாந்தாமணியும் அவள் தாயாரும் வந்திருந்தனர் என்று சொல்ல வேண்டியதில்லை.

பிருகதீசுவரர் பேரிலுள்ள கிருதிகளை ஹரி மனமுருகிப் பாடியபோது அனைவரும் மெய்ம்மறந்தனர். மகுடியில் கட்டுண்ட நாகம்போல் அவர்கள் இசையில் திளைத்திருந் தனர். சிறுவன் ஒருவன்; யாரோ எழுதிய சீட்டு ஒன்றை ஹரியிடம் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தான் ஹரி. அதில் கல்யாணி பாடும்படி கேட்டுச் கொள்ளப்பட்டிருந்தது. நேற்றுத் தெப்பத்திலும் அவனுக்கு இதே அநுபவம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கடிதம் வரும்வரை இன்று அவனுக்குக் கல்யாணி பாடுவதாக உத்தேசமில்லை. எனினும் சீட்டு வந்த பிறகு பாடாமல் மறுக்க மனம் வரவில்லை.

கல்யாணியில் விஸ்தாரமாக ராகம், தானம், பல்லவி பாடி நிறுத்தியதும் எழுந்த கரகோஷம் கோவிலெங்கும் எதிரொலித்தது. நிரவலும் ஸ்வரமும் அவன் பாடிய அழகைக் கண்டு காந்தாமணி பிரமித்துப் போனாள்.