பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 புல்லின் இதழ்கள்

புத்தம் புதிய திருவனந்தபுரம் தம்பூரா. ஒரு முறை மீட்டினான். அது அவனுடன் மலையாளத்தில் கொஞ்ச

வதுபோல் இருந்தது.

‘பாகவதர் சாரே! ஞான் ஜெனிச்சப் பின்னிடு, வித்வான்மாராயிட்டு, நிங்கள் கையில் தன்னெயானு: ஆத்யமாயிட்டு வன்னிட்டுள்ளது; அது என்றே பாக்யம். நவ்லதாயிட்டு கல்யாணியில் ஒரு பாட்டுப் பாடணும்: என்றே செவிகொண்டு கேள்கட்டே.”

“ஓ! அங்ஙனே தன்னே ஆகட்டே’ என்று சிரித்துக் கொண்டே தனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில் பேசியபடி ஹரி தம்பூராவைக் கீழே வைத்தான்.

அவன் அங்குள்ள எல்லாப் படங்களுக்கும், வாத்தி யத்துக்கும் தீபாராதனை காட்டிவிட்டுக் கர்ப்பூரத் தட்டைக் கீழே வைத்தான். அவசரமாகக் கண்ணில் ஒற்றிக்கொண்ட காந்தாமணியின் தாய் வேலையைக் கவனிக்க வேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.

ஹரி தம்பூராவை எடுத்துச் சுத்தமாகச் சுருதி’ சேர்த்துக் காந்தாமணியிடம் நீட்டினான். அதை அவள் எழுந்து நின்று தொழுது இரு கரங்களாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். புதிய அவளுடைய நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்து ஒரத்தில் மஞ்சள் குங்குமம் தடவினான் ஹரி.

பிறகு, “உனக்கு எத்தனை வர்ணம் பாடம் ஆகியிருக்கிறது?’ என்று கேட்டான்.

‘பத்துப் பதினெட்டு வர்ணங்கள் வரைத் தெரியும். கீர்த்தனைகள் சுமார் முப்பது வரும்.’

‘'அடேயப்பா! இவ்வளவு பாடம் ஆகியிருக்கிறதா? என்னென்ன வர்ணங்கள் தெரியும்?'