பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 புல்லின் இதழ்கள்

கவும் இனிமையாகவும் அந்தப் பாட்டை அதிக மெருகுடன் அவள் பாடிவிட்டதைக் கண்டு அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அவன் அவளிடமிருந்து தம்பூராவைக் கையில் வாங்கிக் கொண்டான். பிரமாதமாகப் பாடிவிட்டாயே! எங்கே, அந்தச் சங்கதிகள் எனக்குப் பேசுகின்றனவா என்று பார்க்கிறேன்’ என்று அந்தப் பாட்டை மீண்டும் புதிய கற்பனையில் அவள் பிடித்த பிடிகளையும் மீறி பாடிப் பார்த்தான்.

“பெரிய சங்கீத வித்துவான்களிடம் பழகுவது மிகவும்

கஷ்டம், அவர்களிடம் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாக எண்ணிப் பேச வேண்டும்; எதிராளியின் ஒவ்வொரு செய்கையையும் அவர்கள் உரைக்கல்லில்

போட்டுப் பார்ப்பார்கள்’ என்று தாயார் கூறும் சொற்கள் அவள் நினைவுக்கு வந்தன. நான் எதேச்சையாக அவர் பாடிய பாட்டைப் பாடியதை அவர் தவறாக எடுத்துக் கொண்டு, என் மூக்கை அறுப்பது போல் மறுபடியும் பாடிக் காட்டி என் தலையில் குட்டினாரோ!’ என்று எண்ணிக் கண்கலங்கினாள் காந்தாமணி. பூனை அவள் முகத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

“ நான் ஏதாவது தவறுதலாக நடந்து கொண்டால் என்னை மன்னியுங்கள்’’ என்று அவள் அவனை நோக்கிக் கூறியதைக் கேட்டதுந்தான் அவனுக்கே அது புரிந்தது.

‘உன் மனத்தை வருத்த வேண்டுமென்று நான் அந்தப் பாட்டைப் பாடவில்லை. நீ பாடிக் கேட்டதும் ஏதோ ஒர் ஆர்வத்தில்; உன்னைப்போல் பாட வேண்டுமென்ற ஆசையில் அப்படிச் செய்துவிட்டேன். வேறு ஒன்றும் வித்தியாசமாக எண்ணிக் கொன்ளாதே’ என்று அவளுக்கு