பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 புல்லின் இதழ்கள்

கிறாயே!”

-ஆமாம். இன்னும் இடக்குக்கு ஒன்றும் குறைச்சல்

இல்லை.”

“அது சங்கீதத்தோடு பிறந்தது; உடம்போடுதான்

போகும். இப்படி நாம் உட்கார்ந்து பேசி எத்தனை நாளாயிற்று சுந்தரி?’’

ஆமாம், இப்போ நாளை எண்ணிக்கொண்டிருக் கிறேன்; அதற்குள் போனவர்கள் திரும்பி வந்துவிடுவார் கள். பேசவேண்டிய விஷயம் வண்டி இருக்கிறது. என்னவோ ஹரிகூட ஊரில் இல்லை போல் இருக்கிறது. எப்போது வருகிறானாம்?’ என்று சுந்தரி கேட்டாள்.

உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததாகச் சொன்னானோ!’

T தெரியும். தஞ்சாவூரில் யாரோ ஒரு மிராசுதார் வீட்டுப் பையனுக்குப் பாடம் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.

பின்னே என்ன? நேற்றுப் போனவன் ஒரு வழியாக அங்கேயே தங்கி இரண்டாம் நாள் பாடத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு வரலாம் என்று இருக்கிறானோ என்னவோ? இல்லாவிட்டால் அதற்கென்று ஒரு தடவை இங்கே வந்து மறுபடியுந்தானே போயாக வேண்டும்?” என்று கூறிவிட்டு, கச்சேரிக்கெல்லாம் போய் வந்தானே: எல்லாம் எப்படி நடந்ததாம். விசாரித்தாயா?” என்று சுந்தரியிடம் கேட்டார்.

நான் விசாரிப்பானேன்? வந்தவுடனே அவன் அதைப்பற்றி என்னிடமும் வசந்தியிடமும் மிகவும் சந்தோஷ மாகச் சொன்னான். போன இடத்தில் எல்லாரும் உங்களைப் பற்றியே விசாரித்தார்களாம். பாகவதரை