பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 புல்லின் இதழ்கள்

யும் அவனோடு சேர்த்துவிட அருள் புரியட்டும் என்பதே அவளது இடையறாத பிரார்த்தனையாக இருந்தது. பிறரு பிரார்த்தனைக்கு உரிய பலனையும் அவள் மனம் கனவு காண ஆரம்பித்தது.

கையில் இருந்த பூனையை இப்படியும் அப்படியும் புரட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் காந்தாமணி. அன்று அவள் மனம் மிகுந்த குதுரகலத்துடன் இருந்தது. அந்த மகிழ்ச்சியில், ஹரி அன்று மிகவும் சோர்ந்து வந்தி ருப்பதை அவள் கவனிக்கத் தவறிவிட்டாள். அவனும் தன் சுகவீனத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஹரி, வந்தவுடன் காந்தா மணியிடம் சூடாக ஒரு தம்ளர் காபி கொண்டு வரும்படி கூறினான். பையில் இருந்த ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ஹரி தயாராகக் காத்துக் கொண்டிருப்பதற்குள் அவள் கையில் காப்பியோடு வந்து விட்டாள்.

டான காபி நெஞ்சை நனைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் ஹரிக்குச் சற்றுப் புதுத் தெம்பு வந்தது. வழக்கம்போல் அவள் தம்பூராவைக் கையில் எடுத்துக் கொண்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மீட்டிக் கொண்டிருந்தாள்.

ஹரி அவளைப் பார்த்து, என்ன பாடலாம்?’’ என்று கேட்டான்.

“'உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லுங் களேன்.

‘போன தடவை என்ன நடந்தது?”

நாயகி.’

அப்போது இன்று “தர்பார்’ வைத்துக் கொள் வோமா?’ ஹரி வேண்டுமென்றே கேட்டான்.