பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 307

காந்தாரி: ஆனால் தேவகாந்தாரி அல்ல!’ புதிர் போட் டாற்போல் கூறியவள் விடுவிடென்று கீழே சென்று

விட்டாள்.

ஹரி மட்டும் அந்தப் பெயரையே மனத்துக்குள் உருட்டிக் கொண்டிருந்த்ான். ‘காந்தாமணிக்கும் காந்தா ரிக்கு ம் என்ன சம்பந்தம்’ என்று அவன் குழம்பிக்கொண் டிருந்தபோது, கையில் அவள் கொடுத்த தபால் கார்டுடன் ஒரு காகிதம் இருப்பதைக் கண்டான். அதைப் பிரித்துப் பார்த்த ஹரி பிரமித்துப் போனன்.

“காந்தாமணி -ஹரி என்று எழுதி, அதில் அவள் பெயரில் உள்ள ‘மணி’ யையும், தன் பெயரிலுள்ன ஹ’ வையும் நீக்கி, கூட்டியே அவள் தன் பெயரைக் காந்தாரி ஆக்கிக்கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால், அதே சமயம் தன்னைக குருடனாக, திருதராஷ் டனாக ஆகவேண்டுமென்று கூறியதின் உட்பொருளும் அவனுக்குப் புரிந்தது. காந்தாமணி போட்ட புதிரை அவிழ்த்துவிட்டதில் அடையவேண்டிய மகிழ்ச்சிக்குப் பதில், ஹரியின் உள்ளத்தில் கவலையே மேலோங்கியது.

இரவு மணி பத்தடித்தது. ஹரி கட்டிலில் படுத்திருந்தான். ஏனோ அவனுக்குத் தூக்கமே வரவில்லை. நாளை இரவு அவன் சுவாமி மலையில் படுத்துக் கொண் டிருப்பான். பஞ்சணையும் கட்டிலும் இன்றோடு சரி. ஆனால், அந்த மன அமைதியும், நிறைவும், இந்த வசதி களை அநுபவிக்கும்போது ஏன் ஏற்படவில்லை? குணமான தும் உடனேயாவது புறப்பட்டுப் போயிருக்க வேண்டாமா? அதன் பிறகும் கடிதம் எழுதிப் போட்டுவிட்டு அதிக நாள் ஏன் தங்க வேண்டும்?

அவன் மனத்தில் பயம் சூழ்ந்து கொண்டது.

  • ஊருக்குப் போனதும் காயத்திரிக்கு என்ன பதில் கூறுவது? அவள் என்னுடைய இந்தச் செய்கையை ஆதரிப்பாளா?