பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 புல்லின் இதழ்கள்

எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்?’ என்று ஹரி தன்னையே கடிந்து கொண்டான் .

ஆனால், அதே சமயம், தான் மயக்கமுற்று விழுந்த தும், பணத்தைப் பணமென்று பார்க்காமல் செலவு செய்து, இரவு பகலாய் அருகில் இருந்து கண் விழித்து உயிரூட்டிய காந்தாமணியையும், அவள் தாயையும் மீறிக் கொண்டு புறப்படவும் அவனால் முடியவில்லையே!

கீழே சுவரிலிருந்த பெரிய கடிகாரம் மீண்டும் ஒரு முறை ஒலித்தது. இரவு மணி பத்தரை. எதேச்சையாக நிலைப் படி பக்கம் திரும்பியவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

இருள் சூழ்ந்த அறையில் மங்கலாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த விடிவிளக்கின் தடத்தில், ஒர் உருவம் நிழலாடுவது போல் இருந்தது.

ஹரி கூர்ந்து கவனித்தான். எழுந்து உட்கார்ந்து யார்?’ என்றான்.

காந்தாமணியின் செல்லப் பூனை, துள்ளி அவள் கட்டிலில் ஏறியது. உஸ்! ஏன் சத்தம் போடுகிறீர்கள்?” என்று அவன் வாயைக் கையால் மூடினாள் காந்தாமணி.

நீயா?'-ஹரியின் குரல் குழறிற்று.

வாயைப் பொத்திய கையை, அவள் எடுக்கவே இல்லை. கை மகிழம்பூவாக மணத்தது. ஹரியின் உடல் நடுங்கியது. மாடிப்படியை அவன் கண்கள் துழாவின.

இருளில், நிலவின் ஒலியாகத் தான் அருகில் இருக் கையில்; விளக்கைப் போட எழுந்தவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துத் தடுத்தாள் காந்தாமணி.

கையை விடு’ என்று உதறியவனின் குரல், மார்கழி மாதக் குளிரில், நடுக்குளத்தில் நிற்பவனைப் போல் நடுங்கியது.