பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 319

ாடுத்தால் வயிறா நிறையப் போகிறது? போகவிட்டால் தலை வெடித்துவிடுமா, அரங்கேற்றம் நின்று போகுமா?” என்று மனத்துக்குள்ளேயே பொருமிக் கொண்டாள்.

ஹரிக்குத் தஞ்சாவூரிலிருந்து வந்ததிலிருந்து, மன நிம்மதி இல்லை. காந்தாமணியின் மனத்தை மிகவும் புண் படுத்திவிட்டதாக, உள்ளுணர்வு அவனை உறுத்திக் கொண்டேயிருந்தது.

பார்க்கப் போனால், இதற்கெல்லாம் முதல் குற்ற வாளி, தானே என்பதை உணர்ந்தான். ஆதியிலிருந்தே அவன், தன்னை ஒரு பாட்டு வாத்தியாராக எண்ணிக் கொண்டு, அந்த வீட்டுக்குச் செல்லவில்லை. சத்திரத்தில் தங்கியிருந்தவனை, வருந்தி அழைத்துச் சென்றார்கள்: ராஜ உபசாரம் செய்தார்கள். அவனுடைய பாட்டு அவர் களுக்குப் பிடித்திருந்தது. பெண்ணுக்கு, ஹரி பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டுமே என்று கவலைப்பட்டாள் காந்தாமணியின் தாய்.

ஆரம்பத்தில், அவனும் பிடி கொடுக்காமல் சற்றுப் பிகுவோடுதான் நடந்து கொண்டான். ஆனால் நாளடை வில், அவனுடைய பிடிகள் எல்லாமே நழுவிப் போய், அவன் அவர்களுடைய அன்புப் பிடியில் வசமாகச் சிக்கிக் கொண்டான். காந்தாமணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதைக் கச்சேரிக்குப் போவதைவிட முக்கியமாகவும், அதிக மதிப்புள்ளதாகவும் கருதினான். அப்படிக் கருதுவது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது: திருப்தியைத் தந்தது. ஆனால், அந்த அதிர்ஷ்டத்தில் திடீரென்று இப்படி இடி விழுமென்று அவன் எதிர் பார்க்கவே இல்லையே!

சுவாமிமலை டாக்டர் எழுதிய டானிக், நன்றாகவே வேலை செய்தது. ஹரிக்குப் பழைய தெம்பு மீண்டு: மிகுந்த உற்சாகமாகவே காணப்பட்டான். இடையே இரண்டு மூன்று கல்யாணக் கச்சேரிகளுக்கும் போய் வந்