பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டபச் சாதகன் 29

அவருக்குக் கண்ணப்பன் மேல் தப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. சங்கீதப் பித்துள்ள மகனின் விருப்பத் துக்கு மாறாக அவனைப் பந்தலில் விட்டுச் சென்றதற்காகப் பெரியசாமியையே கோபித்துக் கொண்டதோடு, சங்கீத ரசனை உள்ள பிள்ளையைப் பெற்றதற்காகவே பெரியசாமி யையும் மன்னித்து அனுப்பி விட்டார் மைனர். ஆனால் அதைப் புரிந்து கொள்ளப் பெரியசாமியால் முடிந்தால் தானே? -

வீட்டுக்குச் சென்றதும் முனியம்மாளிடம் அன்று நடந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது; ரகளை பண்ணு வாள் என்று பயந்து, பெரியசாமி எவ்வளவோ ஜாக்கிரதை’ யாக இருந்தும், மறுநாளே விஷயம் அவள் காதுக்கு எட்டி விட்டது. பக்கத்துத் தெரு லைட்டுக்காரப் பாவாடை, கல்யாண வீட்டில் நடந்ததை அன்றே அக்கறையோடு வந்து, முனியம்மாவிடம் சொல்லிவிட்டான். பாவாடைக்கு எப்போதும் பெண்களிடம் தனித்துப் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக்கும் பக்கத்து ஊர்ச் சின்னப் பெண்ணான முனியம் மாவிடம் பேசுவதென்றால் அவனுக்குச் சோறு தண்ணியே வேண்டாம். இதற்காகவே அவன் அடிக்கடி பெரியசாமியின் வீட்டுக்கு வருவான். வலிய வலிய, முனியம்மாளிடம் வந்து ஏதாவது பேசுவான். அவளுக்கும் பாவாடையின் பேச்சில். சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது.

அதைப் புரிந்து கொண்ட பாவாடை இப்போது அதைத் தனக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். தொழில் துறையில் பெரியசாமியிடம் தனக் குள்ள விரோதத்தை யெல்லாம் தீர்த்துக்கொண்டான். ஒன்றுக்குப் பத்தாக முனியம்மாளிடம் உருவேற்றிச் சென்றான். அவளும், அவன் அடித்த வேப்பிலையின் வேகத்தில், தன் புருஷன் வீட்டுக்கு வந்ததும் சரியானபடி ஆடித் தீர்த்தாள்.