பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லின் இதழ்கள்

“ உன் மவன் இனி இந்த வீட்டுக்குள்ளற வந்தா காலை ஒடிச்சிடுவேன்!” என்று கையில் விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு நின்றாள். உடனேயே தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்ததற்காகக் கணவனை வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்தாள். ‘அப்பனும் பிள்ளையும் ஒண்ணு; நான்தான் இந்த வீட்டிலே தனி. எனக்குத்தான் இங்கே யாருமே இல்லே. ஆதரவாயிருந்த பாவி பக்கிரியும் போயிட்டான்’ என்று தம்பியில்லாக் குறையைச் சொல்லி அழுது புலம்பினாள். பிறகு, ‘நான் இப்பவே என் பிறந்த வீட்டுக்குப் போயிடறேன். இனிமே இந்த வீட்டிலே என்ன இருக்கு? உனக்கும் எனக்கும் ஒத்துக்காது’ என்று சொல்லிப் பானையிலிருந்த பழம் புடைவையை எல்லாம் சுருட்டி மூட்டை கட்டிப் பாவலாக் காட்டினாள்.

பெரிய சாமி இதைக் கண்டு உண்மையிலேயே நடுநடுங்கிப் போனான். வயசான காலத்தில் தன்னையும் கைக் குழந்தைகளையும் தனியாகத் தவிக்கவிட்டு அவள் ஊருக்குப் போய்விடுவாளோ? பெண்டாட்டியை அருமை யாக வைத்துக் காப்பாற்றத் தெரியவில்லை என்று மற்றவர் களிடம் ஏச்சும் பேச்சும் வாங்க நேருமோ என்று மனம் பதைத்தான். வயதையும், தான் அவளுடைய கணவன் என்பதையும் மறந்து முனியம்மாளிடம் கெஞ்சினான். அவள் கையிலிருந்த துணிமூட்டையைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்திழுத்து வாங்கி வைத்துக் கொள்ளத் துடித்தான். எதற்கும் மசியாமல் முனியம்மாள் உக்கிர மாகவே நடித்தாள்.

தந்தையின் தவிப்பையும் கண்ணிரையும் கண்டு மனம் பொறுக்காத கண்ணப்பன் சிற்றன்னையின் காலில் விழுந்து அழுதான். முனியம்மாள் அவனை எட்டி உதைத்தாள்.

o

“அந்தப் பயல் ஒரு இடைஞ்சல்’ என்று பாவாடை ளுக்குப் போதித்திருந்தான். ஆகவே கண்ணப்பனைக்