பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 புல்லின் இதழ்கள்

மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு, இங்கேயே இரு இல்லாவிட்டால் நானும் வருவேன்” என்று அழுவாள். சுசீலா அவளைக் கேலி செய்வாள். வசந்தியை சமாதானம் செய்து புறப்படுவதற்குள் லட்சுமிக்குப் ேப ா து ம் போதுமென்றாகிவிடும். சிறு வயதிலிருந்தே சுசீலா அப்படித்தான். திருவிடை மருதூருக்குப் போனால், அங்கே கிடைப்பதையும் தின்று விட்டு; வரும்போது வசந்தியோடு ஏதேனும் சண்டை போட்டு, அவளை அழவும் விட்டுத்தான் திரும்புவாள்.

இதனாலேயே பாதி நாள் லட்சுமியம்மாள் சுசீலாவை அழைத்துச் செல்லமாட்டாள். ஆனால், அங்கே போனதும். குழந்தையை விட்டு விட்டு வந்ததற்காக லட்சுமியைச் சுந்தரி கோபித்துக் கொள்வாள். வசந்தியும்; முன் தடவை. சுலோ தன்னைக் கிள்ளியதையோ, தன்னுடைய பலூனைப் பிடுங்கிச் சென்றதையோ மறந்து, “ஏன் பெரியம்மா, அக்காவை அழைச்சுக்கிட்டு வரல்லே? உன்கூட “டு போ’ என்று அழுவாள்.

நீதாண்டி என் பொண்ணு; அது பேய்’ என்று. லட்சுமியம்மாள் வசத்தியை மார்போடு அணைத்துக் கொள்வாள்.

இப்பொழுது-இன்னும் மும்முரமாக அந்தப் பேயின் ஆட்சிதான் அந்த வீட்டில் நடக்கிறது என்பதை அறிந்து கொண்ட வசந்தி, அங்கே நடந்ததைத் எல்லாம் தன் தாயிடம் கூறினாள். அதனால், சுந்தரியே, மகளை அங்கே அதிகம் போக வேண்டாமென்று தடுத்துவிட்டாள்.

ஹரி, தஞ்சாவூரில் பாடத்துக்குப் போன இடத்தில் ஒரு வாரம் உடம்பு சரியில்லாமல் கிடந்துவிட்டான் என்று கடிதம் வந்திருப்பதாகக் கேள்வியுற்றதும், சுந்தரியோடு வசந்தியும் கலங்கினாள்.

ஹரி ஊரிலிருந்து வந்திருப்பான் என்று அறிந்ததும், நேரில் போய்ப் பார்த்து வந்தால்தான் சமாதானம் ஆகும்.