பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணையாழி 363

போல் வசந்தி துடித்துக் கொண்டிருத்தபோது-அவனே வந்தான்

ஹரி கூறியதை எல்லாம் சுந்தரி கவலையோடு கேட்டாள். அதற்குள் வசந்தி, இந்த உடம்போடு இங்கேயும் ஏன் வந்தீர்கள்? திங்கட்கிழமை திருவனந்த புரம் வேறு போகவேண்டு மென்கிறீர்கள்; அங்கேயே இருந்து கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்ளக்கூடாதா?’’ என்று கேட்டாள்.

அவள் இயற்கையாக அநுதாபப்பட்டுக் கூறுவதாகத் தான் சுந்தரி நம்பினாள். ஆனால், ஹரியின் மனத்துக்கு அவள்தன்னைக் கிண்டல் பண்ணுகிறாளோ என்றே தோன்றியது.

எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று ஹரி வசந்தியைப் பார்த்துக் கேட்டான்: ‘'ஏன். நான் இங்கு வருவது உனக்குப் பிடிக்கவில்லையா?”

“ஹாம்! சரணத்திலிருந்து பாட்டை ஆரம்பிக்கிறீர் களே. உங்களுக்குத்தான் இங்கே வருவதென்றால் பிடிக்க வில்லை. அதற்கு, நேரம் இல்லை’ என்கிற உறை போட்டு மறைக்கிறீர்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள், நாங்கள் என்றும் ஒரே மாதிரியாகத்தான் இருக் கிறோம். அன்பை விலைக்கு வாங்க முடியுமா?” -

பெண்ணின் துயரம் தாயின் உள்ளத்தில் எதிரொ லித்தது. ஹரி ஒவ்வொரு முறை திருவிடைமருதுாருக்குப் போய் வரும்போதும் இம்மாதிரியான சம்பாஷணைகளி லேயே மனம் புண்பட்டுத் திரும்புவது வழக்கம். வரவர அவன் மனம் வெகுவாக வேதனைப்பட்டது.

‘லோகரீதியான இன்பக் கேளிக்கைகளைப் பற்றியோ; திருமணத்தைப் பற்றியோ நானே எண்ணிப் பார்க்காமல் இருந்து வரும்போது: என்னுடைய திருமணத்தைப்