பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணையாழி 369,

கூறினால் போதும்; ஏன் எதற்கு என்று கேட்காமல் பணம் கைக்கு வந்து விடும். அதை நம்பித்தான் ஹரி பக்கிரிக்கு அத்தனை துணிச்சலுடன் முன்பு வாக்குக் கொடுத்திருந் தான். ஆனால்

தங்கள் வீடு விற்பனைக்குக்கூட அவர்கள் வராததோடு: அதிலுள்ள சாமான்களையும் அவர்கள் எடுத்துச் செல்ல வில்லையாம்! அப்படியே விட்டோடு ஒட்டு மொத்தமாக யாரோ ஒரு சேட்டுக்கு விற்று விட்டதாகக் கேள்விப் பட்டான். அவனுக்கு இது அதிசயமான செய்தியாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? -

“இனிமேல் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப் பதில் அர்த்தம் இல்லை. பக்கிரி கல்யாணத்துக்காக மாப்பிள்ளை முதற்கொண்டு பார்த்து வைத்து விட்டான். நம்மால் தாமதம் கூடாது’ என்ற முடிவுக்கு வந்தான் ஹரி. - o --

ஹரியின் சம்பாத்தியத்தை பாங்கில் அவன் கணக்கில் பாகவதர் போட்டு வைத்து: ஒரு பெரும் தொகையாகச் சேர்த்து வைத்திருந்தார்.

ஹரி இப்போது அதைத்தான் நினைத்துக் கொண் டான். பங்களூரிலிருந்து வந்த பிறகு, தங்கைகளுடைய திருமண விஷயமாகக் குருநாதரிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்.