பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணப் பிரவேசம் 387

சுமார் இருபது வர்ணம், நூறு கீர்த்தனைகள் வரை பாடம் பண்ணியிருக்கிறாள்’ என்றார் சேகர்.

“ஓ! அப்படியென்றால் கச்சேரி பண்ணலாமே!’ என்றான் ஹரி ஆச்சுரியத்துடன்.

--- உடனே சேகர், என்ன ஸார். நீங்கள் கூட இப்படிச் சந்திரா கட்சி பேசுகிறீர்கள்? பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த வர்ணத்தையும், கிருதியையும் மட்டும் மேடையில் போய் ஒப்புவித்து விட்டால் போதுமா? கற்பனையாக நாலு ஆவர்த்தனம் ஸ்வரமும், இரண்டு ராகமுங்கூடப் பாடத் தெரியாவிட்டால் காசு கொடுக்கிறவர்கள் கேட்டு விட்டுப் போவார்களா?’ என்றார்.

பலே பலே! விஷயம் தெரிந்துதான் வைத்திருக் கிறீர்கள். நீங்களும் பாடுவீர்களோ?’ என்றான் ஹரி.

ஹரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சேகர், எனக்கும் ஆசைதான். ஆனால் கடவுள் என்னவோ இந்த ஜென்மத்தில் எனக்கு அந்த பாக்கியத்தைக் கொடுக் காமல் இருந்து விட்டார்’ என்று கூறும் போதே சந்திரா குறுக்கிட்டு, நம்பாதீர்கள் ஸார், பொய். வேண்டு மானால் சங்கீதத்தை இவர் முன்னால் கொண்டு வந்து போட்டுப் பாருங்கள். அப்படியே ராகம், ஸ்வரம், நிரவல்’ கோவை என்று அக்கு வேறு ஆணிவேறாய்ப் பிரித்துப் பிரித்து. எவ்வளவு அழகாக ஆபரேஷன் செய்து ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கிறார் பாருங்களேன்’ என்றாள்.

இதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவருடன், கட்டிலில் இருந்த பாகவதரும் சேர்ந்து சிரித்தார்.

பட்டணத்தில், புருஷனும் மனைவியுந்தாம் எவ் வளவு தமாஷாய்ப் பழகுகிறார்கள்! இப்படியல்லவா டாக்டர் தம்பதிகளைப் போல் இருக்க வேண்டும்?” என்று சுலோ மனத்தினுள் எண்ணிக்கொண்டாள்.