பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 - புல்லின் இதழ்கள்

லட்சுமியம்மாள் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு வெளியே வருவதற்கும் நர்ஸிங் ஹோமிலிருந்து பாக வதரை அழைத்துப் போக வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது.

சேகர் பாகவதரிடம், நான் இப்போது என்னுடன் உங்களை நர்ஸிங் ஹோமுக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்துவிடலாம் என்று இருக்கிறேன்; புறப்படலாமா?’’ என்றார்.

உடனே பாகவதர், ஒரு முறை சேகருடைய முகத் தையே உற்றுப் பார்த்துவிட்டு, சுற்று முற்றும் பார்த்தார்.

பாகவதரின் கண்கள் எதையோ தேடி அலைவதைக் கண்ட சேகர், என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்று அன்புடன் கேட்டார். டாக்டருடைய பரிவு அவர்

நெஞ்சைத் தொட்டது.

அருகில் யாரும் இல்லாதது கண்டு, பாகவதர் மிகவும் தயக்கத்துடன் கேட்டார்: “இங்கே பஞ்சாங்கம் இருக்கிறதா?’’ go

‘இல்லை என்கிற பதிலைக் கூறச் சேகர் தயங்கிக் கொண்டிருந்தபோதே, இந்தாருங்கள் அப்பா’ என்று காயத்திரி பெட்டியிலிருந்து பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மகிழ்ச்சியோடு அதைப்பெற்றுக்கொண்ட பாகவதர், வேகமாக மாதங்களைப் புரட்டினார். பிறகு ஒரு குறிப் பிட்ட பக்கத்தில் ஆழ்ந்து கவனத்தைச் செலுத்திவிட்டுச் சேகரைப் பார்த்து, பன்னிரண்டு மணிக்கு மேல் புறப் படலாமா? இன்னும் அரை மணிதானே இருக்கிறது? அதுவரை தியாஜ்யம் இருக்கிறது’ என்று டாக்டரிடம் அனுமதி கேட்பதுபோல் கேட்டார். o

சேகரும் சிரித்துக்கொண்டே, எப்படி உங்கன் செளகரியமோ, அதுதான் முக்கியம். இனிமேல் இது