பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. யார் இந்தப் பையன்?

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஸ்டேஷ ானுக்குத் தாமதமாக வந்ததற்காக ஹரி தன்னை மிகவும் நொந்து கொண்டான். குருவின் விஷயத்தில் அலட்சியமா o இருந்து விட்டது போல அவன் மனமே அவனைத் தண்டித் தது. வாசலில் வண்டிகள் நிற்கும் இடத்துக்கும் பிளாட் பாரத்துக்குமாக அவன் மாறி மாறி ஒடினான். தனக்குப் பழக்கமான வண்டிக்காரர்களை விசாரித்தான். அவர்களது பதில் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. மீண்டும் டிக்கெட் கலெக்டரிடம் வந்து கேட்டான். அவர் அவன் பேச்சைச் சரியாகக் காதில் போட்டுக்கொள்ளாததோடு, வழக்கப்படி. கையை நீட்டி அவனிடமே டிக்கெட் வேறு கேட்டார்.

இரண்டாவது மணி அடித்ததும் ஹரி மீண்டும் ஒரு முறை ரெயில் வண்டியின் தலைக்கும் வாலுக்குமாக ஒடிப் பார்த்தான். ரெயில் வருவதற்கு ஒரு நிமிஷத்துக்கு முன்பே ஸ்டேஷனுக்கு வந்திருந்தால் மனம் இத்தனை கிலேசப் படாது அல்லவா? ‘குருநாதர் வந்திருந்து ஒருவேளை என்னைக் காணாமல் வண்டியில் ஏறிப் போய்விட்டாரா? அல்லது இன்று வரவே இல்லையா?” என்று எண்ணிக் கொண்டே ஒடிய போதுதான் திடீரென்று யாரோ, ஹரி!’ என்று அழைக்கும் குரல் கேட்டது.

பிடில் பஞ்சு அண்ணா அவனைப் பார்த்துவிட்டு அருகில் கூப்பிட்டார். வழியில், பாகவதர் திருவிடை மருதுாரில் இறங்கி விட்டார்’ என்றும், எப்போது வருவார் என்பது தெரியாது’ என்றும் அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே வ ண்டி புறப்பட்டது. பச்சைக் கொடிக்குப் போட்டியாகப்