பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்தப் பையன்? 39;

  • பின்னே ஏன் போடல்லை?”

கிடையாது, ‘

‘கிடையாதுன்னா. . . . அப்பா, அம்மா கிடையாதா : பூனூல் கிடையாதா ? நாணா மாமாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. இந்த நிலையில் லட்சுமியம்மாள், அண்ணா,

இங்கே வாயேன்’ என்று அவரை உள்ளே அழைத்தாள். ஹரி தன் வேலையைக் கவனிக்க வெளியே சென்றான்.

தபாலாபீஸிலிருந்து கடிதங்களை பெற்று வீடு திரும்பு வதற்குள் மணி பத்து அடித்துவிட்டது. வீட்டுக்கு வந்ததும் கடிதங்கள் சம்பந்தமாக ஒரு மணிநேர வேலை இருந்தது.

கச்சேரிக்குத் தேதி கேட்டு எழுதியிருந்த சபாக் கடிதங் களையும், கல்யாணக் கச்சேரிக்கு நாள் குறிப்பிட்டுச் சம்மதம் கேட்டிருந்த கடிதங்களையும் தனியாக வைத்துக் கொண்டான். சமீபத்தில் பாகவதர் பாலக்காட்டில் பாடியதை வெகுவாகப் புகழ்ந்து ஒரு ரசிகரிடமிருந்து வந்த பாராட்டுக் கடிதத்தைத் தனியாக வைத்தான். பாகவதர் ஏற்கனவே கச்சேரிக்கு ஒப்புக் கொண்டிருந்த தேதிக்குச் “செளகரியப்படுமா?’ என்று கேட்டிருந்த ஒன்றிரண்டு பேர் களுக்கு, நாட்குறிப்பைப் பார்த்து உடன் பதில் எழுதிப் போட்டான். ஆயுள் இன்ஷாஅரன்ஸ் கம்பெனியிலிருந்து பணம் கட்ட வந்த பிரீமியம் நோட்டீசைப் பைல் பண்ணி வைத்தான். பங்களுர் அன்பர் ஒருவர், கச்சேரியின் போது கூறியபடி அனுப்பியிருந்த அசல் ஊதுவத்திப் பாக்கெட்டைப் பிரித்துப் பூஜையறையில் கொளுத்தி வைத்தான். மீதியை அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்தான். மறக்காமல், ஊதுவத்தி அனுப்பிய அன்பருக்கு, பெற்றுக் கொண்ட விவரத்துக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதினான். இப்படி யெல்லாம் காரியங்களை ஒழுங்காகவும் உடனுக்குடனும் செய்து முடிக்கும் வகையில் பாகவதர் அவனைத் தயார் செய்திருந்தார்.