பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புல்லின் இதழ்கள்

நாணா மாமாவுக்குப் பரம சந்தோஷம், எத்தனையோ நாளாக அந்த வீட்டில் நடந்து வந்த அநாசாரத்தைத் தாம் வந்த ஒரே நாளில் சீர்படுத்தி, வைக்க வேண்டிவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டதாக உள்ளத்துக் குள் ஒரு மகிழ்ச்சி. சுசீலாவின் உள்ளத்திலும் அந்த எதிரொ லியின் நிறைவும் திருப்தியும் நிலவியிருந்தன. -

ஹரி தட்டை எடுத்து அலம்பினான். தான் தனித்துச் சாப்பிட்ட இடத்து எச்சிலைச் சாணமிட்டு மெழுகினான்; துணியினால் துடைத்தான். புதுப் பழக்கமானாலும் எல்லா வற்றையும் பொறுமையாகவும், செம்மையாகவும் செய் தான்.

s சுசீலாவுக்கு அவன் படுகிற அவஸ்தைகள் வேடிக்கை யாக இருந்தாலும், அவளையும் மீறிச் சிறிது சலனமும் ஏற். பட்டது. அதிலிருந்து அவன் மீண்டபோது அவளையும் அறி யாமல் ஒருவித மகிழ்ச்சி தோன்றியது.

இரவு ஒன்பது மணி அடித்தது. தெருவில் கயிற்றுக் கட் டிலைப் போட்டுப் படுத்திருந்த அண்ணாவுக்கு தங்கை அரு. மையோடு பால் கொண்டு வந்து மகாடுத்தாள். இரவு முழு வதும் அவர் வந்த காரியத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண் டிருந்தார்.

சுசீலாவை அவர் முன்பு பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் உருவத்தில், அழகில், அந்தஸ்தில், குணத்தில் கூட எவ்வளவோ மாறுதல்கள் இருப்பது புலனாயிற்று. தம் மூன்றாவது பிள்ளை ராமபத்திரனுக்குச் சுசீலா சரியான இணையாவாள் என்று அவர் மனம் முடிவு செய்தது. சுப்ப ராமன் வத்ததும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் போதும். மீதிக் காரியங்களை தங்கை கவனித்துக் கொள்வாள். தம் பிள்ளையைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவன் அவ ருடைய இடுப்பிலிருக்கும் பொடி மட்டை. நினைத்தபோது எடுத்து உறிஞ்சலாம். இழுத்த இழுப்புக்கு வரக்கூடியவன்