பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் ஒரே ஜாதி 55.

அதைப் பற்றிச் சவகாசமாகச் சொல்லுகிறேன். பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. முதலில் நீ கால் கையை அலம்பிக் கொண்டு சாப்பிட உட்காரு. நல்ல வேளை, சமயத்துக்கு வந்தாய். ஐந்து நிமிஷம் போயிருந் தால், லக்ஷ்மி அந்தப் பையனுக்கு போட்டிருப்பாள் பிறகு நீ மீதத்தைதான் சாப்பிட வேண்டியிருந்திருக்ரும்’ என்று. கூறியபடி அடுக்களைப் பக்கம் தம் குரலைத் திருப்பினார்.

பாகவதருக்கு ஒரு நிமிஷத்துக்குள் நானாவின் வருகை யினால் வீட்டில் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் அனைத்தும் நன்கு புரிந்துவிட்டன, கையில் வெள்ளித் தட்டைக் கொண்டு வந்த லட்சுமியம்மாள் அதை வழக்க. மாகக் கணவர் சாப்பிடுகிற இடத்தில் வைக்கப் போனாள், அதற்குள் பாகவதர் மனைவியை ஒர் அதட்டு அதட்டி, * அதை இங்கே கொண்டு வா’ என்று தட்டைக் கையில் வாங்கிக் கொண்டு இடைகழியில் போய் ஹரியினருகில் உட்கார்ந்து ஊம், பரிமாறு’ என்று சற்றுக் கடுமையாக உத்தரவிட்டார், லட்சுமியம்மாளுக்கு பயத்தினால் உடம்பு நடுங்கியது.

‘வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகக் கண் வருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்து அவரது கோபத் தைச் சம்பாதித்துக் கொண்டோமே, எல்லாம் இந்த அண் ணாவால் வந்த வினை அல்லவா ?’ என்று லட்சுமியம் மாளின் மனம் சங்கடப்பட்டுக் கொண்ருக்கும்போதே, மீண்டும் அதட்டிய பாகவதரின் உரத்த குரல் அவளது சுய உணர்வைத் தட்டி எழுப்பியது.

ஏன் மரம் மாதிரி அப்படியே நிற்கிறாய் ? சாப்பாடு இல்லையா?’

லட்சுமியம்மாளுக்குத் தாளவில்லை. துக்கம் தொண்

டையை அடைத்தது. எல்லாம் இருக்கிறது : உள்ளே வந்து உட்காருங்கள். இரண்டு பேருக்கும் போடுகிறேன்.'"