பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*56 புல்லின் இதழ்கள்

  • இந்தப் புத்தி இதற்கு முன்னே உனக்கு எங்கே போ -யிருந்தது? இந்த வீட்டில் நான் இருந்தால் ஒன்று இல்லா விட்டால் ஒன்றா நடக்கிறது ! சே ! இந்த இரண்டு நாளாக ஹரிக்கு இங்கே வைத்துத்தானே சாதம் போட்டீர்கள் ? இப்பொழுது மட்டும் என்ன வந்து விட்டது ? இனிமேல் எனக்கும் சாப்பாடு இங்கேதான். இது சங்கீதக்காரன் வீடு. நாங்கள் எல்லாம் ஒரே ஜாதி; ஒரே இனம். எங்களுக் குள்ளே பேதம் இல்லை. சாதத்தைப் போடு யாருக்கோ விளக்குவதுபோல் பாகவதர் ஒரே மூச்சில் பேசினார். லட்சுமியம்மாளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

போகட்டும். தெரியாமல் புத்தியில்லாமல் நடந்து கொண்டேன். பசியோடு வந்திருக்கிறீர்கள். நேரமாகி விட்டது. வாருங்கள், இரண்டு பேருக்கும் உள்ளேயே போடுகிறேன். ‘

ஒன்றும் வேண்டாம். இப்போது நான் சொல்லு கிறபடி நீ கேட்கப் போகிறாயா அல்லது நாங்கள் இரண்டு பேருமே எழுந்திருந்து கிளப்புக்குப் போகவா?’’

பாகவதரின் குரலில் கடுமை தெறித்தது. அரை நாழிகையாக வீடு படுகிற அமளியை நானா LD TLD IT பார்த்துக் கொண்டே இருந்தார், அதற்கு மேலும் அவரால் மெளனமாக இருக்க முடியவில்லை. மேலும் தம் பொருட்டுத் தங்கை பேச்சு வாங்குவது அவருக்குத் தாளவில்லை, சுப்பராமா, இப்போ என்ன வந்து விட்டது? பெரிசா இவ்வளவு பாடு படுத்திறியே! ஹோட்ட லுக்குப் போக உனக்கு மட்டுந்தான் தெரியுமோ? நான் தான் இந்தப் பழக்கத்தை மாத்தினேன். 676or IT லட்சுமியைக் கோவிச்சுச்காதே, யாரோ குலம் கோத்திரம் தெரியாததுகளை எல்லாம் சமைக்கிற இடத்தில் வைத்துக் கொண்டு சமபோஜனந்தான் பண்ணுவேன்னா, தாராள மாய்ப் பண்ணிக்கோயேன். அப்புறம் எங்களுக்கெல்லாம் இங்கே வரவேண்டிய வேலை இல்லை’ என்றார்.