பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*56 புல்லின் இதழ்கள்

பயிற்சி பூர்த்தியானதும், அரங்கேற்றத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் பாகவதருடைய விருப்பப்படியே கத்தரியின் பாட்டி பிரமாதமாகச் செய்தாள். திருவிடை மருதுார்க் கோயிலில் மூகாம்பாள் சந்நிதியில் அரங்கேற்றம் விமரிசையாக நடைபெற்றது. மகாவித்துவான்கள் எல்லா ரும் வந்திருந்து கச்சேரியைக் கேட்டுச் சுப்பராமனையும் சுந்தரியையும் ஆசீர்வதித்தனர். சுந்தரி மேடைமீது சர்வாலங்கார பூவிதையாகப் பணிவுடன் அமர்ந்து, சிறிதும் சபைக் கூச்சம் இல்லாமல், தன் திறமையெல்லாம் பிரகா சிக்கப் பாடினாள்.

சுந்தரியின் பாட்டி பெருமையாலும் மகிழ்ச்சியாலும் பூரித்துப்போனாள். கண்ணேறு படாமலிருக்க வீட்டுக்குச் சென்றதும், முதல் காரியமாகப் பேத்திக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டாள். ஆனால் அதையும் மீறி எப்படியோ ஒரு கொள்ளிக் கண் சுந்தரியின் மீது பட்டுத்தான் விட்டது.

ஆம்! சுந்தரி அரங்கேற்றத்துக்கு மேடைமீது உட்கார்ந்து பாடிய பிறகு அடுத்த கச்சேரிக்கு அவள் மேடை மீது உட்கார்ந்து பாடவே இல்லை. அதற்கான வாய்ப்பே அவளுக்குக் கிட்டவில்லை.

காரணம் வேரொன்றும் இல்லை. அன்று சுந்தரிக் கச்சேரி செய்கிறபோதே சுப்பராமன் மனத்துக்குள் திட்ட மிட்டுவிட்டார் ; ஆயுள் முழுவதும் சுந்தரி தமக்கே சொந்தமாகி, அவளுடைய இசையை நினைத்த போதெல் லாம் கேட்டுப் பருகி இன்புற வேண்டும். அதற்கு-சுந்தரி மாற்றானுக்கு மனைவியாகாமல், அவளைத் தாமே ஏற்றுக் கொள்வது ஒன்றுதான் வழி என்ற எண்ணம் எப்படியோ சுப்பராமன் உள்ளத்தில், கோவிலிலேயே பிறந்து விட்டது. வீட்டுக்கு வந்ததும் அவளைத் தனியாக அழைத்தார்.

குருதட்சிணையாக அவள் கொடுத்த பொன்னையும் பொருளையும் தட்டோடு அவள் எதிரில் வைத்தார். அவள்