பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் செய்த மாயை 69

இதயமே சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் பேஸ் ருந்தது அவருக்கு. சுந்தரி, அழுகிறாயா? நான் தான் உன்னிடம் முன்னமே கூறிவிட்டேனே, இது என்னுடைய வேண்டுகோளேயன்றிக் கட்டளையல்ல என்று. உன் விருப்பத்துக்கு மாறாக எதுவும் நடைபெறக் கூடாது. இதில் உனக்கு நான் ஒரு வார அவகாசம் தருகிறேன். நன்றாக ஆசோசனை செய். உன் பாட்டியைக் கலந்து கொண்டு முடிவு கூறினால் போதுமானது. ஒரு காரியத்துக்குத் துணிவதற்கு முன்பு, யோசிப்பதற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் செலவிடலாம் ;காத்திருக்கலாம்; ஆனால் முடிவுக்கு வந்தபிறகு அதைப்பற்றி எண்ணி வருந்தக் கூடாது. இதை நன்கு ஞபாகத்தில் வைத்துக்கொள். திடீ ரென்று நான் இத்தனை பெரிய கேள்வியைக் கேட்டு உன்னைத் திணறவைப்பேன் என்று நீ சிறிதும் எதிர்பார்த் திருக்காமாட்டாய். ஏன், நானே எதிர்பார்த்தவன் அல்ல.

  • உனக்கு இத்தனை காலம் நான் சிட்சை சொல்லிக் கொடுத்தபோது உன் எதிரில் மணிக் கணக்கில் உட்கார்ந் திருந்துவிட்டு எழுந்திருப்பதைப் பெருந் தபஸ்போல எண்ணி வெற்றிகண்டிருக்கிறேன். கண்டவரைக் கிறங்கவைக்கும் உன் கட்டழகு என் சிந்தையில் மிருகவெறியை ஊட்டியதில்லை. ஆனால் அரங்கேற்ற மேடையில் உன்னைக் கண்டதும், உன் தெய்விக இசையைக் கேட்டதும்; நான் மனம் பேதலித்துப் போனேன். என் வாழ்வின் ஜீவ ஒளியாக என்றும் நீ என் அருகிலேயே இல்லாவிட்டால் நான் உயிருடன் இருக்க முடியாதுபோல ஒருவிதப் பயமும் ஏக்கமும் என்னைத் தாக்கின. இறுதியில் முழுக்க முழுக்க உன்னை என்னுடையவளாகவே ஆக்கிக் கொள்வதைத் தவிர, இதற்கு வேறு மார்க்கமே இல்லை என்று என் மனம் முடிவு செய்துவிட்டது.’

உள்ளத்தைத் திறந்து கொட்டிக்கொண்டிருந்த பாகவதர் சட்டென்று ஒரு நிமிஷம் நிறுத்தினார்.