பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்தவர் கூடினர் 77

சுமந்து கொண்டு அவள் ஆதரவின்றி அநாதையைப் போல் இருக்கிறாள் என்று எண்ணிய போது, அவருக்கே தாள வில்லை.

‘பாட்டிக்கு என்ன உடம்பு? என்ன செய்தது? நீ ஏன் எனக்குச் சொல்லி அனுப்பக் கூடாது அல்லது ஒரு வரி எழுதக்கூடாது?’ என்று கேட்டார்.

சொல்லியனுப்புவதற்கான உறவுடன் நீங்கள் இங்கிருந்து செல்லவில்லையே! மேலும், பாட்டி இறக்கிற வரை உங்களைப் பார்க்காமலே இருப்பது நல்லது என்றே எனக்குப் பட்டது. அதனால்தான் நானும் சொல்லி அனுப்பவில்லை. அன்று அரங்கேற்றம் முடிந்து வந்து பிறகு நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்த காரசாரமான சம்பாஷணைகளைப் பற்றிப் பாட்டி நீங்கள் போன பிறகு கேட்டாள். நான் அத்தனையையும் விவரமாகச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவளுக்குக் கோபம் கண் மண் தெரியாமய் வந்து விட்டது. சிட்சை சொல்லிக் கொடுத்தார் என்றால் அதற்குத் தகுந்த பரிசுகளைக் கொடுத்தோம். இன்னும் வேண்டுமென்றால், கேட்ப, தெல்லாம், கேட்ட போதெல்லாம் மனம் கோணாமல் கொடுப்போம்; வித்தையைச் சொல்லி கொடுத்தவர் என்று ஆயுள் முழுவதும் அன்போடு இருப்போம்; அவரது ஆசி யோடு வாழ்வோம். ஆனால், அதற்காக உன்னையே அவர் கேட்பதா? லாபத்தில் சாப்பிடலாம்; முதலையே தின்று விட்டால் வியாபாரம் பிழைக்குமா? என்று உங்களை வாய்க்கு வந்தபடிப் பேசினாள். ஏற்கெனவே அவளுக்கு ரத்தக் கொதிப்பு உண்டு. நானும் டாக்டரும் அவளுக்கு எவ்வளவு கூறியும் அவளது ஆவேசம் அடங்கவில்லை. அவளுடைய சம்மதத்தைக் கேளாமல் நானும் உங்கள் எண்ணததுக்குச் சரி’ என்று தலையாட்டி விட்டது அவளுக்குத் தாளவில்லை. என்பெண் இருந்தால் இப்படி யெல்லாம் நடக்கப் பாாத்துக் கொண்டிருப்பாளா?