பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புல்லின் இதழ்கள்

நோட்டம் பார்த்து முளையிலேயே கிள்ளி எறிந்து, வளர வேண்டிய விதமாக வளர்த்திருப்பாளே! பாவிக்கு அவ்வளவு சமர்த்தும் சாமர்த்தியமும் இருக்கக் கண்டுதான் எமனுக்கே பொறுக்கவில்லை; கொண்டு போய் விட்டான். ஜாம்பவான் மாதிரி நான் இருக்கிறேன் எல்லாத் துன்பங் களையும் பார்த்து அநுபவிக்க-என்று என் தாயை நினைத்து ஒயாமல் அழுதாள். என் மனத்தைக் கலைத்து விட்டீர்கள்’ என்று உங்களை வாயாரத் திட்டிக் கொண்டே இருந்தாள்; திட்டிக் கொண்டே ஒரு நாள் போயும் சேர்ந்தாள்’.

‘ஏன், உன் பாட்டியின் இறுதி ஆசை பூர்த்தியாக இப்போது நான்தான் வந்து விடடேனே, பாட்டிக்குப் பதில் உன் வாய் வலிக்கிற வரை என்னை திட்டித் தீர்த்து விடு. பாவம்! அவளுடைய ஆத்மாவாவது சாந்தியா கட்டும்’ என்று சுப்பராமன் கூறிய போதே, அருகில் இருந்த சின்னப் பெண்ணும் அவருடன் சேர்ந்து சிரித்தாள்.

பிறகுதான் சுப்பராமனுக்கே சுருக்கென்றது. இப் போது நாம் ஒரு நேயாளியைப் பார்க்க வந்திருக்கிறோம். அதுவும் பஞ்சு கூறியது போல்-தங்கச் சிலை போல் இருந்த சுந்தரி, புழுதியில் கிடக்கும் மண் பொம்மை போன்ற நிலைக்கு வரக் காரணம் நானேதான். அவளை அவள் போக்குக்கு விடாமல் ஆசையை திசைமாற்றி விட்டுப் பிறகு உதாசீனமும் செய்து விட்டுச் சென்ற தாங்க முடியாத ஏமாற்றம்தான் ஊமையடியாக விழுந்து அவளைக் கிடத்தி விட்டது. இனி மேல் அவள் முன் போல் எழுந்திருந்து, பழைய குது.ாகலமும் கலகலப்பும் பெற ஏதாவது வழி செய்வதுதான் நம்முடைய தற்போதைய பணியேயன்றிப் பரிகாசத்துக்கு இது அல்ல நேரம்'- என்று அவரது மனமே கடமையை சுட்டிக் காட்டியது.