உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புள்ளிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு எனக்குச் சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டான். ஆர்க்மிடீஸ் சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தான். கடைசி வரை அவனுக்கு எவ்வளவு தங்கத்தோடு வேறு உலோகம் சேர்க்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவனுக்கே ஒரு எண்ணம். ஒன்றொடென்றைச் சேர்க்கும் பொழுது இது எவ்வளவு அது எவ்வளவு என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை, தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டு ஆராய முற்பட்டான். அப்படி ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு நீர்த் தொட்டியில் அமர்ந்து ஒரு நாள் அவன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அவனுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது. அந்த விடை கிடைத்தவுடன் தான் நீர்த்தொட்டிக்குள்ளே நிர்வாணமாக அமர்ந்திருப்பதை மறந்துவிட்டு கண்டுபிடித்து விட்டேன் ! கண்டுபிடித்து விட்டேன் ! “ எ என்று தெருவழியே கூவியவாறு அரண்மனையைநோக்கி ஓடினான். என்ன கண்டுபிடித்தான் என்றால், நீருக்குள்ளே தான் அமுங்கி இருக்கும்பொழுது நீர்த்தொட்டியிலுள்ள தண்ணீர் அந்தத் தொட்டிக்கு வேளியிலே வழிகிறதல்லவா: அதிலிருந்து - ஒரு திடப்பொருள் ஒருதிரவப் பொருளுக்குள்ளே அமுக்கப்படும் பொழுது அந்தத் திரவப் பொருள் வெளியிலே வழியுமானால், அந்த அளவிற்கு எடை உள்ளே தங்கியிருப்பதாக அர்த்தம் என்பதைக் கண்டுபிடித்து, அதிலேயிருந்து கலப்பு எவ்வளவு - உண்மையான தங்கம் எவ்வளவு - என்று கண்டுபிடிக்க முடியும் என்கின்ற அந்த விதியை வகுத்துக்கொண்டு அரசனிடத்திலே சென்றான். அரசன் அதற்குரிய பரிசைத் தந்தான். அது மாத்திரமல்ல. அவன் போர்ப்படைக் கருவி பலவற்றையும் கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தன் மன்னனுக்குச் செய்து கொடுத்தவன். 131 ரோமாபுரியை ஆண்ட தளகர்த்தர்கள் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்துவார்கள். அந்த பாய்மரக் கப்பல்களையெல்லாம் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/15&oldid=1706213" இலிருந்து மீள்விக்கப்பட்டது