உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புள்ளிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவிலே இருந்தவாறு தீயிட்டுக் கொளுத்துவதற்கான தந்திரங்களை ஆர்க்கிமிடிஸ் தன்னுடைய மன்னனுக்கு கற்றுக் கொடுத்தான். 7000 To பூதக் கண்ணாடிகளை வைத்து சூரிய வெளிச்சத்திலே அந்தப் பூதக்கண்ணாடியிலே அந்த வெப்பம் விழச்செய்து, அந்த க வெப்பத்தை பாய்மரக் கப்பலிலே கட்டப்பட்டிருக்கின்ற பாய்களின் மீது ஓடவிட்டு, அந்தப் பாய்களை எரியச்செய்து மூன்று ஆண்டுக் காலம் ரோமானிய தளகர்த்தன் மார்செல்லஸ் என்பவன் உள்ளே நுழைய முடியாதபடி கடலிலே தங்கியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவன் சிராகஸ் நாட்டை வென்றான். வென்று உள்ளே நுழைந்தான். ங்கு குக் வென்று வந்த தளபதிக்கு ஒரு ஆசை. ஆர்க்கிமிடீஸ் என்ற அந்தக் கணித மேதை தன்னுடைய ஒப்பற்ற அறிவினால் அல்லவா மூன்று ஆண்டுகாலம் இந்த நாட்டிற்குள்ளே நுழையமுடியாமல் கடலிலே நம்மை தடுத்து வைத்திருந்தான்: எனவே அவனைப் பார்க்க வேண்டும் என்று வீரன் ஒருவனை அழைத்து உடனடியாக ஆர்க்கிமிடீஸை என்னிடத்திலே அழைத்துவா என்றான். வீரன் சென்றான். 1006TC ஒரு அவன் சென்ற பொழுது ஆர்க்கிமிடிஸ் கணிதத்திலேகவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் "ஐயா இந்நாட்டை வென்ற மார்செல்லஸ் உங்களை அழைக்கிறார் ! என்று வீரன் சொன்னான். பா OTOLOLOTO UL க அதைக்கவனிக்காமல் கணிதத்திலே தன்னுடைய ஆழ்ந்த சிந்தனையை செலுத்திக் கொண்டிருந்தான். இரண்டுமுறை கூப்பிட்டான். மூன்று முறை கூப்பிட்டான். நான்காவது முறை ஆர்க்கிமிடிஸ் சொன்னான், வேலையாக இருப்பது உனக்கு தெரியவில்லை. யார் அழைத்தாலும் வரமுடியாது " என்று சொல்லி விட்டு வேலையைத் தொடங்கினான். 61 உடனே வீரனுக்கு கோபம் வந்துவிட்டது. தன்னுடைய மன்னன் அழைத்து வரவில்லையென்ற காரணத்தால் கையிலே 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புள்ளிகள்.pdf/16&oldid=1706214" இலிருந்து மீள்விக்கப்பட்டது