பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*இன்ருெரு நான் காவலுக்குச் செல்லா விட்டால்

என்னமச்சான், குடிமூழ்கி.ப் போய் வி டாதே!

கொன்றுவிடும் தென்றலுடன் கொடுமை செய்ய க்

குளிர் நிலவுங் கூடிவந்தால் தாங்கு வேனுே?’’

என்றவள்தன் வாய் திறந்து கேட்க வில்லை!

இருவிழியில் ஏக்கத்தைத் தேக்கி வைத்து,

மென்று.மிழ்ந்த வெற்றி ஆலயால் சிவந்து சிற்கும்

மெல்லிதழைப் பற்களினுல் கடித்துக் கொண்டே

ஏற்றிவைத்த கைவிளக்கை எடுத்துத் தந்தே

ஏதுமறி யாதவள் போல் முகத்தைப் பார்த்தாள்:

ஊற்றிவைத்த கஞ்சியுடன் இறுை காயும்

உண்டுவிட்டுத் தலையில்மேல் துண்டைக் கட்டிப்

போற்றிவைத்த ஆளுயரத் தடியைத் துரக்கி ப்

போர்வீரன் நடைபோட்ட பொன்ன னுக்கு

மrற்றிவைத்துப் பதிலுரைக்க மாரிக்க மில்&ல;

மனம்வெதும்பித் தினம் புரியும் பணிக்குச் சென்ருன்.

83