பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கள் குலோத்துங்கன் பதிப்பகம் தனது முதல் வெளியீட்டின் இரண்டாம் பதிப்பாகக் கவிஞர் ஆனந்தம் அவர்கள் பல்வேறு காலகட் டங்களில் இயற்றிய முப்பத்து மூன்று கவிதைகளைத் தொகுத்துச் சிறப்பான ஒரு நூலாக்கி உங்களுக்கு வழங்கி, நீங்கள் களிப்பதன் வாயிலாகப் பெருமை பெறுகின்றது.

தமிழறிந்தார் அனைவரும் படித்துப் பயன் அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு இந்த நூலே அளிக்கின்ருேம். இப்புத்தகத்திலுள்ள கவிதை ஒவ்வொன்றும் சமுதாயச் சிக் கல்களில் ஏதேனும் ஒன்றை உள்ளடக்கியிருப்பதை உணர்வீர்கள். இத்தகு கவிதைகளே மேன் மேலும் இயற்றி ஒரு புது நெறியைக் காட்ட எண்ணிடும் கவிஞருக்கு உங்கள் மேலான ஆதரவை அளித்து ஊக்குமாறு வேண்டுகிருேம்,

விழா நிகழ்ச்சிகளில் பரிசுப் பொருளாக வழங்கிடவும், படிப்பகங் களில் பயன்படுத்தவும் ஏற்றவண்ணம் எழிலோடு இதனை அமைத்துள் ளோம்.

இந்நூல் வெளி வர ஒத்துழைத்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வதுடன் தங்களது அருள் நிறைந்த வரவேற்புக்காகவும் முன் கூட்டியே நன்றி தெரிவிக்கின்ருேம்.

வாழ்க தமிழ் ! குலோத்துங்கன் பதிப்பகம்

சென்னை-2.