பக்கம்:பூங்கொடி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

80

85

வந்தவன் வாய்மொழி

ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்து பாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும் ;

அயரேல் மீனவ ! அறைகுவென் கேள், ! பயில்கரு மறவர் பாண்டிய மரபினர் சங்கம் கிறுவிக் கண்டமிழ்ச் சுவடிகள் எங்கெங் குளவோ அங்கெலாம் துருவித் கொகுத்து வைத்துளார் ; மிகுத்தஅச் சுவடிகள் பகுத்துப் பார்ப்பின் பண்ணும் கூத்தும் வகுத்துக் கூறு நூல் வாய்க்கவும் கூடும் ;

மீனவன் சங்கம் புகுதல்

செவியில் இவ்வுரை கேனெனப் பாய்ந்தது; குவிபடு கையாற் கும்பிட் டெழுந்து சங்கம் புக்குக் கமிழே டனத்தும் பொங்கும் மகிழ்வால் பொன்னியின் செல்வன் துண்ணிதின் நோக்கினன் கண்களி கொள்ளச் சுவடியொன் றுற்றது துள்ளிக் குதித்தனன் :

மீனவன் எக்களிப்பு

தவலரும் உவகை கன்னகம் நிறைக்கக் குழந்தை யாகினன் இருகை கொட்டி, இழந்ததைப் பெற்றேன் இனித்துயர் இல்லை.என் முடினன் பாடினன் அவையகம் மறந்தே ; தேடிய சுவடி ஒடிவங் துறலால் வாடிய அவன்மனம் கூடித் தளிர்த்தது : துயரக் கடலுள் மூழ்கித் துடிக்கும்

அமயத் கொருமரக் கலமென அவற்குச் \ சுவடி துணைசெயச் சோர்வகன் றனனே :

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/105&oldid=665580" இலிருந்து மீள்விக்கப்பட்டது