பக்கம்:பூங்கொடி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

25

30

35

இசைத்திறம் உணர எழுத்த காதை

துயரால் துறத்தல் தன்னல மாகும் அயரா உழைப்பால் அப்பணி புரிகுவம் எண்ணி எண்ணி இம்முடி பேற்றேன் ; அண்ணலும் அம்முடி பறைந்தன ராகலின் இன்னே அதனே இயற்றுதல் வேண்டும் ; கொன்னே வாழ்நாள் குறைவது கண்டோம் விழுங்கி உறங்கிப் பிணியால் மூப்பால் விழுந்து மாய்தல் வீணே யாதலின் புதுமைச் சுவடியின் பொருளெலாம் தெளிந்து போதல் கன்றெனப் புகன்றனள் அருண்மொழி :

பூங்கொடி வேண்டுதல் *

அன்னப் சுவடியின் அரும்பொருள் அனைத்தும் என்னல் ஆப்தல் எவ்வணம் இயலும்? இசையின் திறனும் இயலின் திறனும் நவையற உணர்ந்த நல்லோர் தாமே இதன்றிறம் முழுவதும் எளிதின் அறிகுவர் ; அதனதன் வகைஎலாம் அறிந்தனை நீயே முதன்முதல் இதன்பொருள் மொழிக என்றனள் ;

எழிலியிடம் செல்க எனல்

‘ உயிர்கிகர் மகளே ஒன்றுரை கேண்மோ !

இயலிசைத் திறமெலாம் என்னினும் மிகவே கற்றாள் கிறைபுகழ் பெற்றாள் ஒருத்தி உற்றாள் கொடுமுடி ஊரினள் அம்மகள் அறிவின் உரனும் ஆய்வின் திறனும் செறியும் இயல்பினள் செம்மை வாழ்வினள் நரைமூ காட்டி கம்போற் பொதுப்பணி புரிவது தொழிலாப் பூண்டவள் அவள்தான்

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/112&oldid=665587" இலிருந்து மீள்விக்கப்பட்டது