பக்கம்:பூங்கொடி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70

5

80

85

எழிலியின் வரலாறறிந்த காதை

கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள், துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணிர் வடித்தனள், என்னுடை வாழ்வில் வீசிய பெரும்புயல் விளைக்க துயரம் பெரிகே!

எழிலியின் புலம்பல்

மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப் பாழும் இடர்க்கடல் வீழும் கனியேன் எவ்வணம் உய்குவென்? யாதுநான் செய்குவென்? கவ்விய இத்துயர் கடப்பது யாங்வனம்? பிரிவெனும் பெருஞ்சுரு பேழ்வாய் காட்டி விரைவினில் வங்கென விழுங்கிடும் அந்தோ ! இசையொலி பாவிட இன்புறுங் காலை வசையிலா யாழில் வடிகரம் பறுந்ததே ! கூடி மகிழ்க்க கூத்தும் இசையும் வாடி வதங்கி வாழ்விழங் கனவே ! பண்ணுெலி இழக்கது பாடல் அந்தோ ! கண்ணுெளி இழந்தது கருவிழி அங்கோ ! கொழுநன் இழந்தேன் கொழுநன் இழந்தேன்! உழலும் வாழ்வும் உயிரும் வேண்டேன் : எனுமொழி புலம்பி, இனதுயர் கலியக்

எழிலியின் மெலிவு

கண்படை கொண்டிலள், கருதிலள் உணவைப் புண்படு கெஞ்சம் பூண்டனள் ; அதனல் பண்ணும் இசையும் பரிவுற் றேங்கக் கண்ணும் மனமும் கவலை தேங்க உயிரும் உடலும் நலிந்து மெலிந்தனள் ;

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/120&oldid=665596" இலிருந்து மீள்விக்கப்பட்டது