பக்கம்:பூங்கொடி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

பன்மொழிப் பயிற்சி பாங்குறப் பெறுவர் ; என்தொழில் கூத்தென ஏற்றுளேன் ஆகலின் 185 அயன்மொழி சிற்சில அறிந்துளேன் அன்ப !

தமிழகக் கிளர்ச்சி

உரிமை வாழ்வை உவந்தனர் என்னினப் பெருமை உணர்ந்த பெரியோர், அதல்ை உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டினர் , ஊட்டத் தளர்ச்சி நீங்கித் தமிழக மாந்தர் 140 வளர்ச்சி நாடிக் கிளர்ச்சிகள் செய்தனர் ;

சிற்றினத்தின் சூழ்ச்சிகள்

தமிழர் உயர்வைக் ககைக்கக் கருதிப் பழியும் பொய்மையும் பகர்தல் காணு இழிமதிக் கூட்டம் எம்செயல் கண்டே அவ்விய நெஞ்சில் அச்சமும் சேர 145 எவ்வகை யேனும் தமிழியல் எழுச்சியைக்

கொல்லும் நோக்கொடு குழுமிய சிற்றினம் ஒல்லும் வகையாற் பல்வகைப் பழியைச் சொல்லித் தீர்த்தது சூழ்ச்சிகள் விளைத்தது ;

பொய்ம்மொழி கம்பேல்

சூழ்ச்சியால் அயன் மொழி ஆட்சியைப் பரப்பிடப் 150 ப்ாழ்ச்செயல் புரிந்தது ; பகைமனங் கொண்டெமைக்

குறுமனம் என்று குறைகள் சொற்றது : பிறமொழி வெறுக்கும் பெற்றியர் என்றது : உடனிருக் கழிக்கும் நோய்கிகர் மாங்கர் கொடுமனம் உடையோர் விடுபொய் மொழியை 155 நண்ப ! மெய்யென கம்பேல் , எம்முயர்

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/123&oldid=665599" இலிருந்து மீள்விக்கப்பட்டது