பக்கம்:பூங்கொடி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

180

190

வள்ளுவன் ஒதிய வாய்மைகள் கண்டனர் ; தெள்ளிய தமிழியம் தேர்ந்தனர்; அன்பை உள்ளிய பழுவூர் உறையும் மாந்தர் ;

பழுவூரார் பரிசில் அளித்தல்

நன்னூல் மொழிந்திடும் வைதவிர் அறமெலாம் பன்னூற் கூத்தன் பகர்ந்திடக் கேட்டுக் கழிமிகு மகிழ்வினர் கிறைபடு நிதியம் அரும்பொருள் பலவுடன் அளித்தனர் போற்றப் பெரும்புகழ் விஞ்சிடப் பெயர்ந்தனன் கூத்தன் ;

பிரிந்தவர் கூடுதல்

கருங்கடல் கடந்தனன் கலங்கரு துணையால் தாயகம் கண்டனன் தளிர்த்தனன் மனனே : வேயனே தோளி மீஸ்ரீங் காதலம் காணலும் நீள்துயர் களைந்தனள் ஆங்கே ; பேணிய கூத்தும் பெரும்பே ரிசையும் நீனில மாந்தர் நெஞ்சங் களிகொள மீண்டும் மலர்ந்தே யாண்டும் பரவின. , எழிலிகன் வாழ்வில் எழிலி ஆயினள் :

பூங்கொடி எழிலிபால் எழுதல்

தொழுககும் அந்தத் தாயவள் பாங்கில் எழுக! இசையின் நுணுக்கம் யாவும் பழுதற உணர்க பரப்புக பாரில் என்றனர் அடிகள் எழுந்தனள் அவளே. (198)


106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/125&oldid=665601" இலிருந்து மீள்விக்கப்பட்டது